Showing all 4 results
-
Read more
ஒரு நாளைக்கு 25 மணி நேரம் / Oru Naalaikku 25 Manineram
₹170₹158பேய் மழை. விடாமல் பெய்துகொண்டே இருக்கிறது. நீர் நிலைகள் எல்லாம் நிரம்பி, வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வீணாகக் கடலில் சென்று கலக்கிறது. அச்சமயத்தில் நம்மால் சேமிக்க முடிகின்ற நீர் சொற்பமே. நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியும் தூறிக்கொண்டே இருக்கும் மழைநீர் போலத்தான். நாம் உபயோகமாகப் பயன்படுத்திய காலம் எவ்வளவு இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? வெகு சொற்பம்! வெள்ளம் போல் வீணாகக் கடலில் கலந்துவிடும் காலம் கணக்கிட முடியாதது.
ஒவ்வொரு நொடியையும் திட்டமிட்டுச் செலவழிப்பது என்பது ஒரு கலை. எல்லோராலும் கற்க முடிந்த நிர்வாகக் கலை. கற்றுக் கொண்ட மறுநொடியே, சாதனையாளர் என்ற பட்டம் உங்கள் நெற்றியில் ஒட்டப்பட்டுவிடும். எல்லாம் நம் கையில்தான் உள்ளது. உள்ளது. உள்ளங்கை ரேகையில் அல்ல, மணிக்கட்டில். குறித்த நேரத்தில் இடப்பட்ட பணியைச் செவ்வனே செய்து முடிப்பவர்களுக்கே எதிர்காலத்தின் வாசல் காத்திருக்கிறது.
காலத்தின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கும் நாம், நமக்குப் பின்னால் காலத்தை ஓடிவர வைப்பது எப்படி? அதைத்தான் மணி பார்ப்பது போல் சுலபமாகச் சொல்லிக் கொடுக்கிறது இந்தப் புத்தகம். நேர நிர்வாகம் குறித்து ஆயிரக்கணக்கான இறக்குமதிப் புத்தகங்கள் வந்திருக்கலாம். ஆனால் நமது சூழலுக்கு ஏற்ப, நம்முடைய மக்களின் மனோபாவத்தைப் புரிந்து கொண்டு எழுதப்பட்டிருக்கும் புத்தகம் இது. இதை வாசிக்க உங்களுக்கு ஆகப்போகிற நேரம் செலவல்ல. கண்டிப்பாக ஒரு முதலீடு.