Showing 1–16 of 28 results
-
Add to cart
காமரூபக் கதைகள் / Kaamarooba Kathaigal
₹499₹464சாரு நிவேதிதாவின் புனைவுகள் அனைத்தும் திரும்பத் திரும்ப உறவுகளின் உறைபனியையே தொட முயல்கின்றன . ஆனால் உறைபனி நமக்குப் பழக்கமில்லாதது . அல்லது நாம் அவை நம்மீது இடையறாது பொழிகிறது என்பதை நம்ப விரும்புவதில்லை . பயத்திற்கும் நிச்சயமின்மைக்கும் இடையே நிகழும் வாழ்வின் நடனங்களை எதிர்கொள்கிறது இந்த நாவல் . அது களியாட்டத்திற்கும் மரணத்திற்கும் இடையே காமத்தை சூழ்ச்சியும் வாதையும் போதமும் மிகுந்த மர்ம வெளியாக மாற்றுகிறது . இந்த மர்ம வெளியைக் கடந்து செல்பவர்கள் தங்கள் அடையாளம் என்று எதையும் நிறுவுவதில்லை . மாறாக தங்களது ஒடுக்கப்பட்ட கனவுகளை சோதித்துப் பார்க்கும் ஒரு சோதனைக் களமாக சிறிய சாகசங்களை நிகழ்த்திவிட்டு மீண்டும் தமது ராணுவ ஒழுங்குகளுக்குள் திரும்பிச் சென்றுவிடுகிறார்கள் . ஒற்றர்கள் , மறைந்து திரிபவர்கள் , தண்டிக்கப்படுபவர்கள் , தப்பிச் செல்பவர்கள் மட்டுமே நிறைந்த ஒரு காதல் கதையை எழுதுவதுதான் இந்த நாவலாசிரியனின் சாத்தியமாக இருக்கிறது .
-
Read more
மலாவி என்றொரு தேசம் / Malawi Endroru Desam
₹340₹316அமெரிக்க ஐரோப்பிய சமூகங்கள் மற்றும் அவற்றின் கலாச்சார விழுமியங்கள் குறித்து நாம் கொண்டிருக்கும் பரிச்சயத்தில் சிறிதளவு கூட ஆசிய , ஆஃப்ரிக்க , லத்தீன் அமெரிக்க நாடுகளின் சமூக பண்பாட்டு அடையாளங்கள் குறித்து நமக்கு இல்லை . மூன்றாக உலக பண்பாடுகளின் கலாச்சாரத் தனிமையையும் அதன் ரகசிய வழிகளையும் அறிவது நமது பண்பாடு குறித்த சில புதிய வெளிச்சங்களை அடையும் ஒரு முயற்சியே . அந்த வகையில் ஆஃப்ரிக்க தேசமான மலாவி பற்றிய ஒரு திறப்பை இந்த நூல் நமக்கு அளிக்கிறது .
-
Read more
கெட்ட வார்த்தை / Ketta Vaarthai
₹340₹316சாரு நிவேதிதா தனது அன்றாட வாழ்வில் எதிர்கொண்ட அபூர்வ தருணங்களையும் அபத்த கணங்களையும் பின்புலமாகக் கொண்டவை இந்தக் கட்டுரைகள் . அவை ஒரு தமிழ் எழுத்தாளனாக வாழ்வதன் ஸ்திதியை ஒரு அபத்த நாடகம் போல் விவரிப்பவை . இந்த அபத்த நாடகத்தில் பங்கேற்க வரும் ஒவ்வொருவரையும் பற்றி அங்கதம் மிகுந்த சித்திரங்களை சாரு நிவேதிதா இந்த நூலில் உருவாக்குகிறார்
-
Add to cart
தாந்தேயின் சிறுத்தை / Danteyin Chiruthai
₹340₹316கடந்த இருபது ஆண்டுகளாக சாரு நிவேதிதா தமிழ் சிறுபத்திரிகைச் சூழலில் நடத்திய விவாதங்களின் தொகுப்பு இது . ஒரு தமிழ் எழுத்தாளன் தன் தரப்பினை விட்டுக் கொடுக்காமல் இவ்வளவு நீண்ட போராட்டத்தை நடத்திய சந்தர்ப்பங்கள் மிகவும் அரிது . அதிகாரத்திற்கும் மையப்படுத்தலுக்கும் எதிராக பிடிவாதத்துடன் இயங்கிய நிராகரிக்க முடியாத தரப்பு அது . கலை இலக்கிய சூழலிலும் அதற்கு வெளியேயும் பிற்போக்குவாதத்தையும் , அடிப்படைவாதத்தையும் இந்தக் கட்டுரைகளில் சாரு நிவேதிதா வன்மையாகத் தாக்குகிறார் . வழிபாட்டுக்கான பிம்பங்கள் கட்டி எழுப்பப்படும் இடங்களில் அபத்தங்களின் கேலிச் சித்திரங்களை வரைகிறார் . மறுப்பதற்கும் விவாதிப்பதற்குமான சூழலை தொடர்ந்து உயிர்ப்பித்து வந்திருக்கும் சாருவின் இந்தக் கட்டுரைகள் கடந்த கால் நூற்றாண்டு நவீன தமிழ் இலக்கிய வரலாற்றை ஒரு குறுக்குவெட்டுத்தோற்றத்தில் பதிவுசெய்கின்றன .