Showing all 3 results

  • SAVE 7%
    Add to cart

    அழியாச்சொல் / Azhiyasol

    290 270

    மலையுச்சியில் ஊற்றெடுத்த கணத்திலிருந்து நதியைப் போல நழுவிச்சென்று கொண்டேயிருக்கும் , இடையறாத நனவெழுச்சி பொங்கிப் பெருகியோடும் ஒரு கதை சொல்லியின் குரல் . அந்த நதியில் பழுத்த இலைகளாய் மிதந்து செல் லும் எதிர்பாரா தக்கை நிகழ்வுகள் . தண்ணென்று கனிந்த நிலவாய் ஆழத்தில் எதிரொலிக்கும் கதைசொல்லியின் கனலும் இருப்பு . பெண் உடல்பிம்பம் உடைபடும் தருணங்களும் , அதன் அடியில் இழுபடும் அறுந்திடாத அறத்தின் கயிறுகளும் நூறாயிரம் அழியாச்சொற்களும் அவளை இடையறாது தனிமையின் நதியாய் பாய்ந்திடத் தூண்டுகின்றன . ஒரு முறை கால் வைத்த கணத்தில் மீண்டும் கால் வைக்க முடியாத பேருவகை வாழ்க்கை . கதையினுள்ளே கதை என்று சுருள் சுருளாய்க் கதைவெளிக்குள் அழைத்துச் செல்லும் இடையறா இயக்கத்தின் குறியீடே அழியாச்சொல் . அழியாச்சொல் , குட்டி ரேவதியின் முதல் நாவல் .

  • SAVE 7%
    Add to cart

    மீமொழி / Meemozhi

    135 126
  • SAVE 7%
    Add to cart

    விரல்கள் / Viralgal

    130 121
    பெண் , ஆண் என்ற இரண்டு வெவ்வேறு சிந்தனை உயிரிகள் அல்லது பண்பாட்டு உயிரிகள் இணையும் நீரோட்டத்தில் ஏற்படும் சவால்களை , முரண்களை எதிர்கொண்டு வெல்லும் வழிகளை இந்தக் கதைகள் வழியாக நான் கண்டடைந்தேன் . குறிப்பாக , ‘ விரல்கள் ‘ , மற்றும் ‘ அழகின் ஒரு பகுதி ’ , கதைகள் . பெண்ணும் ஆணும் ஒருவரையொருவர் நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கும் இலட்சோப இலட்ச ஆண்டுகளில் இருவரும் ஒருவரையொருவர் எதிரிகளாய்ப் பார்க்கக் கற்றுக்கொண்டதைக் காதல் வழியாகவே வெல்லமுடிந்திருக்கிறது . என்றாலும் , காதலில் புதைந்து கிடக்கும் முட்டாள்தனம் மானுட ரகசியங்களின் பொருள் விளங்கிக் கொள்ளும் தம் முயற்சிகளைக் கைவிட்டது போல் தோன்ற காதலை எப்படியெல்லாம் தன் வாழ்க்கையின் அறைகளுக்குள் நகர்த்திச் செல்லமுடியும் என்பதன் பயணம்தான் இத்தொகுப்பு .
    குட்டி ரேவதி