Showing all 5 results
-
Add to cart
இஸ்தான்புல் / Istanbul
₹475₹442நோபல் பரிசு பெற்ற துருக்கிய எழுத்தாளர் ஓரான் பாமுக்கின் ஞாபகப் புத்தகம் ‘ இஸ்தான்புல் ‘ . தான் பிறந்து வளர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கும் நகரத்தைப் பற்றி நினைவுகூரும் இந்நூலில் பாமுக் தனது இளமைப் பருவத்தையும் திரும்பிப் பார்க்கிறார் . இளம்பருவத்திலேயே ஒரு எழுத்தாளனின் வளர்ச்சி நிலைகள் தனக்குள் துலங்கியதை நினைவுகூர்கிறார் . தனது நகரம் மாறியதையும் நகரத்தோடு தானும் மாறியதையும் நுட்பமாகச் சொல்லிச் செல்கிறார் . ஓவியனாக விரும்பி எழுத்தாளனாக மாறிய பாமுக் இஸ்தான்புல் நகரத்தைத் தனது எழுத்துமூலம் அசாதாரணமான அருங்காட்சியகமாக மாற்றுகிறார் .ஒரு நகரத்தின் கதை என்ற நிலையிலேயே ஓரான் பாமுக்கின் படைப்பாற்றல் மூலம் இஸ்தான்புல் ஒரு பண்பாட்டின் மையமாகவும் மாற்றங்களின் திருப்புமுனையாகவும் மனிதர்களின் கதைக்களமாகவும் வரலாற்றின் சின்னமாகவும் மாறுகிறது . தனது நகரமான இஸ்தான்புல்லைப் பற்றிச் சொல்லும்போது அவர் பெருமிதம் கொள்கிறார் . நெகிழ்கிறார் . தன்னுடைய கற்பனைத்திறனுக்குச் செழுமையூட்டிய இஸ்தான்புல்லை ஓரான் பாமுக் நினைவுகூரும் விதம் மிக இயல்பானது . அதே சமயம் மிகமிக அசாதாரணமானது . -
Add to cart
பனி / Pani
₹650₹605ஓரான் பாமுக்கின் படைப்புகளில் தனித்துவ மான நாவல் ‘ பனி ‘ . சொல்லப்படும் கதையும் கதை நிகழும் களமும் அவரது பிற நாவல் களிலிருந்து முற்றிலும் மாறுபட்டது .பாமுக்கின் படைப்புகளில் வெளிப்படையாக அரசியல் பேசும் நாவல் ‘ பனி ‘ . மதச் சார்புக்கும் சார்பின்மைக்கும் இடையிலான மோதலைத் துப்பறியும் கதையின் வேகத்துடனும் திருப்பங் களுடனும் சொல்கிறது இந்த நாவல் .தனது படைப்புகளின் நிரந்தரக் இஸ்தான்புல் நகரத்தைவிட்டு துருக்கியின் எல்லைப்புற நகரமான கார்ஸை புனைகளமாக்கியிருக்கிறார் பாமுக் . ஒரு பனிக் காலத்தில் அந்த நகரத்துக்கு வந்து சேரும் பத்திரிகையாளன் ‘ கா’வின் அனுபவங்களே இதன் கதை . இரட்டை ஆன்மா கொண்ட துருக்கியின் நிகழ்கால வரலாற்றையும் மானுட நிலையையும் நுட்பமாக முன்வைக்கும் படைப்பு .