Showing the single result

  • SAVE 7%
    Add to cart

    TCS – ஒரு வெற்றிக் கதை

    550 512

    ஒரு நிறுவனத்தை மாபெரும் நிறுவனமாக மாற்றுவது எப்படி? ஓர் எளிய கனவைப் பெருங்கனவாக வளர்த்தெடுப்பது எப்படி? தகவல் தொழில்நுட்பத் துறையில் முன்நிலை வகிக்கும் நிறுவனங்களில் ஒன்றாக டி.சி.எஸ் வளர்ந்த கதையை அதைச் சாத்தியப்படுத்திய ஒருவரே நேரடியாக நம்மோடு இதில் பகிர்ந்துகொள்கிறார். டாப் டென் நிறுவனங்களில் ஒன்றாக மாறவேண்டும் என்பது டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் நிறுவனத்தின் ஆரம்பகாலக் கனவு. அதை அடைவதற்கு ஒரு காலக்கெடுவையும் அவர்கள் நிர்ணயித்தார்கள். ஆனால் அதற்கு ஒரு வருடம் முன்பாக, அதாவது 2009ஆம் ஆண்டில் கனவு நிறைவேறிவிட்டது. இந்த அதிசயத்துக்குப் பின்னாலிருப்பவர் டி.சி.எஸ் தலைமைச் செயல் அதிகாரியான எஸ்.ராமதுரை. அவர் பொறுப்புக்கு வந்தபோது நிறுவனத்தின் ஆண்டு வருமானம் 155 மில்லியன் டாலர். இன்று 42 நாடுகளில் கிளைகள் படர்ந்துள்ளன. 5 லட்சத்துக்கும் மேலானவர்கள் பணிபுரிகிறார்கள். வருடாந்தர வருமானம் 22 பில்லியன் டாலருக்கும் மேல்.டி.சி.எஸ் நிறுவனத்தின் வரலாறென்பது நவீன இந்தியாவின் மகத்தான வெற்றிக் கதைகளில் ஒன்று. மிகவும் மதிக்கப்படும் வணிகத் துறைத் தலைவர்களில் ஒருவரான எஸ்.ராமதுரை இந்தப் புத்தகத்தில் அந்த அசாதாரண வெற்றியை எட்டிப்பிடித்த கதையை விரிவாக நினைவுகூர்ந்திருக்கிறார்.