Showing all 6 results

  • Out Of Stock SAVE 7%
    Read more

    இந்திர நீலம் / Indira Neelam

    150 140
    அதீத கட்டுப்பாடுகளும் வரையறைகளும் நான்கு சுவரின் இறுக்கங்களும் சேர்ந்து காமம் , அரிய வகை விலங்கைப் போலவே நம் வாழ்வோடு பயணிக்கிறது .
    இதிகாச காலந்தொட்டு , நவீன காலம் வரையான பெண்களின் மனப்பக்கங்களை வாசித்துப் பார்த்தால் எப்படியிருக்கும் என்ற தேடலே இந்திர நீலத்தின் கதைகள் .
    விடுபட்ட , நிறைவேறாத , தோற்றுப்போன காதலையும் காமத்தை யும் பேசுகின்றன இக்கதைகள் .
  • Out Of Stock SAVE 7%
    Read more

    கங்காபுரம் / Gangapuram

    450 419
    நூறு களிறுகளைப் போரில் கொன்று குவிக்கும் வீரனுக்கும் , எதிரிகளே இல்லையென்னும் மாவீரனுக்கும் , விரிந்து பரந்த ராஜ்ஜியத்தின் அரசனுக்கும் , சட்டிச் சோறு வாங்கிச் சாப்பிட்டுக் காலம் கடத்தும் பரதேசிக்கும் , செல்வத்தில் திளைக்கும் வணிகனுக்கும் , சமன் குலைந்த நடத்தையுடன் இருக்கும் பித்தனுக்கும் நினைவுகள் மட்டுமே பொதுவானவை . ஒவ்வொருவரின் மரணத் தருவாயிலும் அவரவரிடம் மிஞ்சி நிற்கப் போவது எஞ்சிய நினைவுகள்தான் .
    ராஜராஜன் என்ற சூரியனுக்கடியில் கரு நிழலென மறைக்கப்பட்டது ராஜேந்திரனின் தன்னொளி . மிகப் பெரும் வெற்றியாளன் . ஆனால் , எப்போதும் தோல்வியின் கசப்புடன் வாழவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டவன் . ராஜேந்திரனின் துயர நினைவுகளின் வேர் தேடிச் செல்லும் பயணமே இந்த ‘ கங்காபுரம் ‘ நாவல் .
  • Out Of Stock SAVE 7%
    Read more

    சாலாம்புரி / Chalampuri

    400 372
    மாயரகசியத்தைப் புதைந்து வைத்திருக்கும் காலத்தின் யுகாந்திரங்களில் எத்தனையோ ‘ மனிதர்களின் வாழ்க்கைப் புதைந்திருக்கிறது . மனிதர்களாலான வாழ்வு ஒருபோதும் ஒற்றைத்தன்மை கொண்டதாக இருந்ததில்லை . சிலருக்கு வெற்றியும் சாதனைகளின் உயரங்களும் கைகூடி வந்தாலும் , அவை அவர்களின் தகுதியின் உயரங்களைவிட குறைவாகவே இருந்திருக்கிறது . வாழ்க்கைத் தனக்கு அணுக்கமாகச் சிலரை வைத்துக்கொண்டிருக்கிறது . சிலரைத் துயரத்தின் எல்லைவரை விரட்டிச் சென்றிருக்கிறது .
    கொள்கையும் அரசியல் சித்தாந்தமும் மனிதகுல நல் வாழ்விற்கான ஆர்வமும் கொண்ட ஒருவன் சுய தேடலோடு வாழ்வைத் தன் அகச்சுடரின் வெளிச்சத்தில் கண்டடையும் பயணத்தின் தொடக்கப் புள்ளியே சாலாம்புரி நாவல் .
  • Out Of Stock SAVE 7%
    Read more

    துரோகத்தின் நிழல் / Dhurogathin Nizhal

    60 56
  • SAVE 7%
    Add to cart

    மரணம் ஒரு கலை / Maranam Oru Kalai

    170 158