Showing all 10 results
-
Add to cart
அசடன் / Asadan
₹1,250₹1,163சிறந்த மொழிபெயர்ப்புக்கான கனடா இலக்கியத்தோட்ட விருது , நல்லி திசை எட்டும் விருது , ஜி.யூ. போப் விருது வென்ற மகத்தான நாவல் “எனக்கு இருபத்தேழு வயதாகிறது .. ஆனாலும் கூட நான் ஒரு குழந்தையைப் போலத்தான் இருக்கிறேன் . என்னுடைய பாவனைகள் எல்லாமே எப்போதுமே இடத்துக்குப் பொருத்தமற்றவையாகவே இருக்கின்றன . எதை எப்படி எந்த அளவுக்குச் சொல்வது என்ற அறிவு என்னிடம் சுத்தமாகவே இல்லை . அதுதான் முக்கியமான விஷயம் .. ” என்று தன்னைக் குறித்த ஒப்புதல் வாக்குமூலத்தை மிஷ்கினே அளித்தபோதும் அவனை அசடனாக்கிப் பரிகசிக்கும் உலகம் அவன் ஒரு தூய ஆன்மா என்பதை மட்டும் மறுதலிப்பதே இல்லை . அவனுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டிருக்கும் கன்யா , ரோகோஸின் போன்றவர்களும் கூட அந்த உண்மையை ஆமோதிக்கவும் அங்கீகரிக்கவும் தயங்குவதில்லை என்பதில்தான் இந்த நாவலின் அழகு பொதிந்திருக்கிறது .எம்.ஏ. சுசீலா -
Read more
கரமசோவ் சகோதரர்கள் 1,2 / Karamazov Sagotharargal 1,2
₹1,500₹1,395நம்மால் ஒருபோதும் தஸ்தயேவ்ஸ்கியின் நிலையை அடைய முடியாது . அது நமக்குத் தெரியும் . ஆயினும் , மீண்டும் மீண்டும் வாசிக்கிறேன் …. ‘ பிரதர்ஸ் கரமசோவை ‘ மீண்டும் மீண்டும் வாசிக்கிறேன் … எவ்வளவோ மகத்தான நூல் என்று மனதில்படுகிறது . இதுவரை காணாத புதிய தளத்தைக் கண்டு பிடிக்கிறேன் . ” – எம்.டி.வாசுதேவன் நாயர்” … தன்னை அறிந்துகொள்ள விழையும் மனிதன் , தன் காலத்தை அறிந்து கொள்ள விழையும் மனிதன் , வாழ்க்கையின் எண்ணற்ற முகங்களைப் புரிந்து கொள்ள விழையும் மனிதன் இருக்கும் காலம்வரை , அவனுக்குத் தஸ்தயேவ்ஸ்கியைத் தேடிச் செல்ல வேண்டிய அவசியம் இருந்துகொண்டு தானிருக்கும் . “– சுந்தர ராமசாமி “தஸ்தயேவ்ஸ்கியை முதன்முதலாகப் படிக்க அமர்ந்த அந்த இரவு , என் வாழ்வில் மிக முக்கியமானதொரு நிகழ்வு . ஒரு மனிதனின் ஆத்மாவிற்குள் முதன்முதலாக என் பார்வை விழுந்தது அப்போதுதான் . அல்லது , தன் ஆத்மாவை என்னிடம் வெளிப்படுத்திய முதல் மனிதன் தஸ்தயேவ்ஸ்கிதான் …. அவனிடம் ஆழமாக மூழ்கிய இந்தத் தருணத்திலிருந்து நான் நிச்சயம் ஒரு வித்தியாசமானவனாக ஆனேன் ! அசைக்க முடியாதபடியும் , மனநிறைவோடும் இந்நிகழ்வு அமைந்தது . விழிப்பதும் , அன்றாட காரியங்களுமான தினசரி உலகம் என்னைப் பொறுத்த வரை மடிந்துவிட்டது … நான் நெருப்பினுள் வாழ்பவன் ஆனேன் . என்னைப் பொறுத்தவரை , மனிதனின் சாதாரண துயரங்கள் . போட்டி பொறாமைகள் , ஆசாபாசங்கள் அனைத்தும் உதவாக்கரை விஷயங்கள் , குப்பை கூளங்கள் என்றாகின ! ” – ஹென்றி மில்லர் -
Read more
குற்றமும் தண்டனையும் / Kuttamum Thandaniyum
₹990₹921உலகச் செவ்வியல் நாவல்களின் தர வரிசைப்பட்டியல் எந்த மொழியில் எவரால் தயாரிக்கப்பட்டிருந்தாலும் அதன் முதல் பத்து இடங்களுக்குள் தவறாமல் இடம் பெறும் மகத்தான தகுதியைப் பெற்றிருப்பது நாவல் பேராசான் ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் என்னும் பேரிலக்கியம் .குற்றம் / தண்டனை ஆகிய இருமைகளைக் குறித்து விரிவான சமூகவியல் உளவியல் பின்னணிகளோடு கூடிய தர்க்கபூர்வமான இரு தரப்பு வாதங்களையும் முன் வைத்து கதைக்கட்டுக்கோப்பு சற்றும் குலையாதவண்ணம் இந்நாவலில் மிக விரிவான ஆழமான ஆராய்ச்சி ஒன்றையே நிகழ்த்தியிருக்கிறார் தஸ்தயெவ்ஸ்கி . ஒரு செயல் எப்போது குற்றமாகிறது … அப்படி அது குற்றம் என்று கருதப்படுமானால் அதற்கான தண்டனை வர வேண்டியது எங்கிருந்து என்பது போன்ற சிந்தனைகளின் பாதிப்புகளால் இந்நாவலின் மெய்யான வாசகர்கள் அலைக்கழிக்கப்படுவதே இந்நாவலின் வெற்றி .ஒரு மனநிலைச் சித்திரிப்பு , உடனேயே அதற்கு நேர் எதிரான மற்றொரு மனநிலைச் சித்திரிப்பு , மிக எளிமையாகத் துவங்கி அப்படியே தத்துவார்த்தத் தளத்திற்கு உயர்ந்துவிடும் உரையாடல்கள் என்று தீவிரமான மொழிநடையோடும் மொழிநடையோடும் செறிவான கதைப்பின்னலோடும் உருவாகியிருக்கும் இந்தப் படைப்பை இதுவரை இருபத்தாறு உலக மொழிகளில் பெயர்க்கப்பட்டிருக்கும் இந்த நாவலை முதன் முதலாகத் தமிழில் மொழிபெயர்க்க வாய்த்தது நான் செய்த நற்பேறு .– எம்.ஏ.சுசீலா -
Add to cart
சூதாடி / Suthadi
₹230₹214மிகவும் கேவலமான என்னுடைய தற்போதைய இழிநிலையை நான் எவ்வளவு நன்றாய் உணர்கிறேன் என்பதை மட்டும் இவர்கள் அறிவார்களாயின் , இவர்கள் என்னைத் தூற்ற இப்படி முன்வரமாட்டார்கள் . ஏற்கனவே எனக்குத் தெரியாத எந்தப் புதிய விஷயத்தை இவர்கள் எனக்குச் சொல்லப்போகிறார்கள் என்று கேட்கிறேன் . இங்குள்ள விவகாரம்தான் என்ன ? விவகாரம் இதுதான் : சக்கரத்தின் ஒரேயொரு சுற்றால் யாவும் தலைகீழாய் மாறிவிடும் ; எனக்கு இப்பொழுது புத்திமதி கூற வருகிறார்களே இதே ஆட்கள் அப்பொழுது எல்லோருக்கும் முதலாய் ( இதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை ) என்னிடம் ஓடிவந்து சிரித்து மகிழ்ந்து பேசுவார்கள் , வாழ்த்துரைப்பார்கள் . இப்பொழுது செய்கிறார்களே அதுபோல அப்பொழுது யாரும் என்னைப் பார்த்ததும் தூர விலகிச் செல்லமாட்டார்கள் . இவர்களை எல்லாம் ஒரு பொருட்டாய்க் கருதுகிறவனல்ல நான் ! இப்பொழுது நான் யார் ? ஒரு பூஜ்யம் ! நாளைக்கு நான் எப்படிப்பட்டவனாக முடியும் ? நாளைக்கு நான் மாஜி மனிதன் என்னும் நிலை யிலிருந்து மீண்டெழுந்து வந்து திரும்பவும் வாழத் தொடங்கமுடியும் . என் நெஞ்சி ல் உறையும் மனித ஆன்மா இன்னும் அறவே அழிந்துவிடவில்லை எனில் நாளைக்கு நான் அந்த ஆன்மாவைத் தட்டியெழுப்பிச் செயல்பட வைக்கமுடியும் .( நூலிலிருந்து … )இந்த நாவல் சூதாட்டம் தவறு என்ற ஒழுக்க போதனையோ அளிக்கும் நாவல் அல்ல.முக்கியமாக ஒரு சூதாடியின் மனம் எப்படி தர்க்கம் புரியும் என்பதே நாவலின் மையம்.அது அடுத்த முறை வெற்றி பெற்றுவிடுவேன் என்று தர்க்கம் புரியும் . அந்த தர்க்கமே அவனை தொடர்ந்து சூதாட வைத்து சூதாடியாகவே இருக்க வைக்கும் -
Read more
நிலவறைக் குறிப்புகள் / Nilavarai Kurippugal
₹250₹233ஒரே வாக்கியத்தில் இந்த நவீனத்தைப் பற்றிச் செல்ல வேண்டுமென்றால் , ‘ இது மனிதஇயல்புகளைப் பற்றிய ஓர் அரிதான ஆவணம் ‘ என்றே கூற வேண்டும் .– கோபிகிருஷ்ணன்