Showing all 16 results
-
Add to cart
அந்த முகில் இந்த முகில் / Antha Mugil Intha Mugil
₹250₹233இந்தக்கதை நான்அறிந்த மெய்யான ஒரு வாழ்க்கையின் புனைவு வடிவம் . அந்த வாழ்க்கையின் உச்சநிலைகள் வழியாக மட்டுமே செல்லும் கதை . எழுச்சியும் சரிவும் உச்சநிலையிலேயே நிகழ்கின்றன . நுரைக்காத தருணமே இல்லாத கதை , பின்னணியாக அமைந்தது சினிமா என்னும் கனவு . அதிலும் கறுப்புவெள்ளை சினிமா என்பது தூய கனவு . கனவின் எழில்கொண்ட ஒரு கற்பனாவாதப் படைப்பு இது . ஒரு காதல்கதை . இழந்த காதலின்அல்லது இழக்க முடியாத காதலின் கதை .
-
Add to cart
ஆயிரம் ஊற்றுகள் / Ayiram Uttrugal
₹210₹195இக்கதைகள் திருவிதாங்கூர் வரலாற்றின் பின்னணியில் எழுதப்பட்டவை . அறியப்பட்ட வரலாற்றை இவை நுணுக்கமான தகவல்களுடன் மறுஆக்கம் சய்கின்றன . மான வரலாற்றுக்கதைகளில் உள்ள சாகசமும் காதலும் இவற்றில் இல்லை . இவற்றில் காட்டப்பட்டிருப்பது ரத்தமும் கண்ணீருமாக வழிந்தோடும் வரலாற்றின் விரிவான யதார்த்தம் . நாம் வரலாற்றில் வீரநாயகர்களை உருவாக்கிக் கொள்கிறோம் . வீரவழிபாடு வரலாற்றை ஆராய்வதற்கான மனநிலையாக இருந்துகொண்டிருக்கிறது . ஆனால் மெய்யான வரலாற்றுநாயகர்கள் வெவ்வேறு விசைகளை திறம்படச் சமன் செய்து பயனுள்ள ஆட்சியை அளித்தவர்களே . அவர்களில் பலர் அரசியர் , இந்த கதைகள் வரலாற்றை இன்றைய நவீன ஜனநாயகப் பார்வையில் உருவாக்கிக் காட்டுகின்றன .
-
Add to cart
இலக்கியத்தின் நுழைவாயிலில் / Ilakiyathin Nuzhaivaiyil
₹160₹149இந்நூல் இலக்கியம் என்னும் அறிவியக்கத்தை , கலையை அறிமுகம் செய்துகொள்ளும் வாசகர்களுக்கு உதவியான ஒன்று . ஒரு வாசகன் இலக்கியத்திற்குள் நுழைகையில் எழும் பல வினாக்களை இது எதிர்கொள்கிறது . பலகோணங்களில் அவற்றை விவாதிப்பதன் வழியாக இலக்கியம் ஏராளமான வண்ணவேறுபாடுகள் கொண்ட ஒரு களம் என்னும் புரிதலை உருவாக்குகிறது . இலக்கியத்தின் கொள்கைகள் , செயல் முறைகளைத் தெளிவுபடுத்துகிறது .
-
Read more
குமரித்துறைவி / Kumarithuravi
₹195₹1811311 ல் டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் தளபதி மாலிக் காபூரின் படையெடுப்பின்போது மதுரையில் இருந்து மீனாட்சியம்மனையும் சுந்தரேசரையும் அன்றைய வேணாட்டுக்கு கொண்டுவந்து ஆரல்வாய்மொழி அருகே உள்ள பரகோடி கண்டன் சாஸ்தா ஆலயத்தில் மறைத்து வைத்தனர் என்பது வரலாறு . 1368 வரை மீனாட்சியம்மன் ஆரல்வாய்மொழியில் இருந்தாள் . அங்கிருந்து மீண்டும் மதுரைக்குக் கொண்டு செல்லப்பட்டாள் . அந்த வரலாற்றுப் பின்னணியில் எழுதப்பட்டது இந்நாவல் . ” இது ஒரு மங்கலப்படைப்பு , முற்றிலும் மங்கலம் மட்டுமே கொண்ட ஒன்று ” என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார் .
-
Add to cart
தங்கப்புத்தகம் / Thangaputhagam
₹330₹307இவை பெரும்பாலும் திபெத்தில் நிகழும் கதைகள் . திபெத் ஒரு தங்கப்புத்தகம் . வாசிக்க வாசிக்க விரிவது , வாசிப்பவர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொருள் அளிப்பது . மானுடத்திலிருந்து தனித்து ஒதுங்கி நின்றிருந்த ஒரு பண்பாடு அது . நித்ய சைதன்ய யதி ஒருமுறை சொன்னதுபோல ‘ கெட்டுப்போகாமலிருக்க குளிர்சாதனப்பெட்டிக்குள் வைத்து பாதுகாக்கப்பட்ட பண்பாடு . மானுடம் இழந்தவை பல அங்கே சேமிக்கப்பட்டிருந்தன . ஆகவேதான் திபெத் அத்தனை மர்மமான கவர்ச்சி கொண்டதாக இருக்கிறது . மீளமீள மறுகண்டுபிடிப்பு செய்யப்படுகிறது . இந்தக்கதைகள் திபெத்தை ஒரு கதைக்களமாகக் கொண்டவை என்பதைக் காட்டிலும் ஒருவகை குறியீட்டு வெளியாகக் கொண்டவை என்று சொல்வதே பொருத்தமானது . கனவில் எல்லாமே குறியீடுகள் . ஒரு கனவுநிலமாகவே இதில் திபெத் வருகிறது . இது மெய்யான திபெத் அல்ல . இது நிக்கோலஸ் ரோரிச் தன் ஓவியங்களில் சித்தரித்த திபெத் . ஆழ்படிமங்கள் வேர்க்கிழங்காக உறங்கும் நிலம் . அத்தனை பொருட்களும் குறியீடுகளாக முளைத்தெழும் மண் . இந்தக்கதைகளில் ஒரு கதையிலிருந்து இன்னொரு கதைக்கு நீண்டுசென்று வலுப்பெறும் ஒரு மெய்த்தேடல் உள்ளது . ஆகவே ஒவ்வொரு கதையும் இன்னொன்றால் நிரப்பப்படுகிறது .
-
Add to cart
நத்தையின் பாதை / Nathaiyin Paathai
₹100₹93இலக்கியம் விந்தையானதொரு கலை . முதன்மையாக கலையென நிலைகொள்கிறது . எது கற்பனையை தன் ஊடகமாக கொண்டுள்ளதோ அது கலை . ஆனால் இலக்கியமென்னும் அறிவின் அனைத்துக் கிளைகளையும் தொட்டு விரிவதும்கூட . ஆகவே அது ஓர் அறிவுத்துறையாகவும் நிலைகொள்கிறது . ஆகவே அது பிற கலைகள் எவற்றுக்கும் இல்லாத விரிவை அடையமுடிகிறது . பிற கலைகளைப்போல் அன்றி நேரடியாகவே சமூக உருவாக்கத்தில் , அரசியலில் பங்கெடுக்க முடிகிறது . கலை அந்த ஊடாட்டத்தின் சில புள்ளிகளை இக்கட்டுரைகள் தொட்டுப் பேசுகின்றன . பெரும்பாலும் சிந்தனைக்குரிய சில திறப்புகளை உருவாக்குவதை , சில வினாக்களை முன்வைப்பதை மட்டுமே செய்கின்றன . இலக்கியம் எழுதுவது , வாசிப்பதனால் மட்டுமல்ல தொடர்ச்சியான விவாதத்தாலும் நிலைகொள்ளவேண்டிய ஒன்று . இலக்கியத்தை அதன் வெவ்வேறு களங்களை முன்வைத்து விவாதிக்கும் இக்கட்டுரைகள் இலக்கியத்தை ஓர் அறிவியக்கமாக நிலைநிறுத்தவும் அதன் கலைப்பரப்பை விரிவாக்கவும் முயல்பவை
-
Add to cart
பத்துலட்சம் காலடிகள் / Paththulatcham Kaladigal
₹300₹279ஒளசேப்பச்சன் ஜெயமோகன் கதைகளில் தோன்றி புகழ்பெற்ற துப்பறியும் கதாபாத்திரம் . அவர் தோன்றும் கதைகள் இவை . வழக்கமான துப்பறியும் கதைகளைப்போல ஒரு குற்றத்தைத் தொடர்ந்து சென்று குற்றவாளியைக் கண்டடைபவை அல்ல . இவை குற்றம் என்னும் புள்ளியில் தொடங்கி வரலாறு , பண்பாடு ஆகியவற்றை இழுத்துக்கொண்டு முன்னகர்ந்து வாழ்க்கையின் அறியப்படாத ஒரு இடத்தைச் சென்று தொடுகின்றன . மானுடனை துப்பறியும் கதைகள் என்று இவற்றைச் சொல்லமுடியும் .
-
Add to cart
வாசிப்பின் வழிகள் / Vasipin Vizhigal
₹210₹195இந்நூல் இலக்கிய வாசிப்புக்குள் நுழையும் எதிர்கொள்ளும் அடிப்படையான கேள்விகளுக்கு இலக்கியம் என்றால் என்ன . இலக்கியவாசிப்புக்கு பயிற்சி தேவையா . இலக்கிய வாசகன் எதிர்கொள்ளும் தடைகள் என்ன , இலக்கியக் கருத்துக்களைச் சொல்வது எப்படி என்பதுபோன்ற பல வினாக்களுக்கு விளக்கம் அளிக்கும் கட்டுரைகள் இவை . உலக இலக்கியக் களத்தில் சென்ற இருநூறாண்டுகளில் நிறைய விவாதிக்கப்பட்ட அடிப்படைகள் இவை . ஆனால் தமிழ்ச்சூழலில் இவற்றை பேசுபவர்கள் குறைவு . இவற்றை அறியாததனாலேயே பலர் ஆரம்பகட்ட குழப்பங்களையே தங்கள் சிந்தனைகளாக கொண்டிருக்கிறார்கள் . அவர்களை அந்தச் சிக்கல்களில் இருந்து விடுவித்து உண்மையான கலைத்தேடல்களுக்குச் செலுத்த இந்த விவாதங்களால் இயலும் .