Showing 1–16 of 144 results
-
Add to cart
அடிப்படை வாதங்களின் மோதல் / Adippadai Vaathankalin Modhal
₹350₹326தாரிக் அலி பாகிஸ்தானில் பிறந்து லண்டனில் வசித்து வரும் பிரபல இடதுசாரி எழுத்தாளர் . 2001 செப்டம்பர் 11 அமெரிக்காவில் இரட்டைக் கோபுரங்கள் தீவிரவாத தாக்குதலால் நொறுங்கியபோது உலகின் மனிதத்தன்மை கடுமையாக ஒடுக்கப்பட்டது . ஆனால் பல இடங்களில் மக்கள் நேரடியாக இத்தாக்குதலை ஆதரித்தனர் , அல்லது மறைமுகமாக மகிழ்ந்தனர் . இது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது . அமெரிக்காவின் செயல்பாடுகள் தான் இவற்றுக்கு காரணம் என்றால் மிகையல்ல . தாரிக் அலி அதற்கான காரணங்கள் குறித்தும் இஸ்லாமின் வரலாறு , கலாச்சாரம் அதன் செல்வங்கள் குறித்தும் ஒரு விவாதத்தை உருவாக்கும் நோக்கத்துடன் இப்புத்தகத்தை எழுதியுள்ளார் .
-
Add to cart
அது இங்கே நடக்காது / Athu Inge Nadakathu
₹440₹409இலக்கியத்திற்காக நோபல் பரிசுபெற்ற ( 1930 ) அமெரிக்க எழுத்தாளரான சின்க்ளேர் லூயிஸ் எழுதி 1935 ஆம் ஆண்டு வெளியான ஆங்கில நாவல் . அதை , தேர்ந்த மொழிபெயர்ப்பாளளரான கி . இலக்குவன் தமிழில் தந்துள்ளார் . முசோலினியும் , ஹிட்லரும் அதிகாரத்திற்கு வந்து ஐரோப்பா வதைப்பட்டபோது அமெரிக்காவில் அதுபோலெல்லாம் நடக்காது எனும் பேச்சுகளுக்கு மத்தியில் 1936 இல் ஒரு ஃபாசிஸ்ட் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவதாக விரியும் நாவல் . இன்றைய அமெரிக்க , இந்திய நிலைகளுக்கும் பொருத்தப்பாடு கொண்ட நாவல் .
-
Add to cart
அல்லி உதயன் கதைகள் / Alli Udayan Kadaikal
₹180₹167தேனி வட்டாரத்தின் வாழ்க்கையையும் நிலப்பரப்பையும் குவிமையமாகக் கொண்டு இயங்கும் இந்தக் கதைகள் ஒரு பகுதி மக்களின் வாழ்வை அழுத்தமான குரலில் பேசி அப்பகுதி வாழ்க்கையின் ஆவணமாக வாசக மனதில் நீங்கா இடம் பிடிக்கின்றன .– ச.தமிழ்ச்செல்வன் -
Add to cart
இடது திருப்பம் எளிதல்ல / Edathu Thiruppam Elithalla
₹260₹242தெற்காசியாவின் சமகால வரலாறு குறித்த ஆய்வில் சர்வதேச அளவில் பெயர்பெற்ற கல்விப்புல ஆளுமையான விஜய் பிரசாத் 2014 பொதுத் தேர்தலுக்கு பின்னராக இந்திய இடதுசாரிகளின் நிலை குறித்து விவரிக்கும் முக்கியமான நூல் .” ஒரு கட்சியின் வரலாற்றை எழுதுவதை , ஒரு நாட்டின் பொதுவான வரலாற்றை ஒரு குறிப்பிட்ட கண்ணோட்டத்தில் எழுதுவதாகச் சொல்லலாம் ” எனும் அந்தோனியோ கிராம்சியின் சொற்றொடரை எடுத்தாளும் விஜய் பிரசாத் , அதற்கொப்ப இடதுசாரிகளின் இன்றைய நிலையை இந்திய நாட்டின் விடுதலைக்கு பிந்தைய வரலாற்றுப் பின்புலத்தில் பொருத்திக் காட்டுகின்றார் .கம்யூனிசம் பலமுறை தோற்கடிக்கப்படலாம் . பலமுறை தவறான வழியில் சென்றுவிடலாம் . ஆனால் போராட்டத்தின் மூலமாக சுய விமர்சனத்தின் மூலமாக மட்டுமே அது புதிய பலம் பெற்று , விஸ்வரூபமாக மீண்டும் எழும் . என்பார் கார்ல் மார்க்ஸ் .” இப்படி நடந்துவிடும் என்ற நம்பிக்கையில்தான் எனது சார்பு இருக்கிறது . இதில் பாரபட்சமற்ற தன்மை என்ற பாசாங்கு கிடையாது . ஆனால் இது எதார்த்தத்தை ஒட்டியது என்று நான் உறுதியாக நம்புகின்றேன் ” எனக் கூறும் விஜய் பிரசாத் என்மீதும் பிறர் மீதும் எனக்கு ஒரேவிதமாக இரக்கம்தான் என்று கூறி , இரக்கமற்ற துல்லியத்துடன் இடதுசாரிகளின் நிலையை , அவர்கள் வந்த பாதையை , சந்தித்த சவால்களை , அவற்றை எதிர்கொண்டவிதத்தை எல்லாம் வரலாற்றுப் பின்புலத்துடன் ஆய்வுக்கு உட்படுத்துகின்றார் .