Showing all 13 results

  • Out Of Stock SAVE 7%
    Read more

    அகம்,புறம்,அந்தப்புரம் / Agam,Puram,Anthappuram

    1,666 1,549
    இந்திய சமஸ்தானங்களை நிராகரித்துவிட்டு இந்திய வரலாறைப் புரிந்துகொள்ள முடியாது .
    மாட மாளிகை , கூட கோபுரம் , பளிங்குப் பிரதேசங்கள் , பரவச நந்தவனங்கள் , இந்தப் புறம் அந்தப்புரம் , எந்தப் புறமும் எழில் கன்னிகைகள் , சுகம் – சொகுசு உல்லாசம் நூறு சதவிகிதம் , எத்தனை எத்தனை இன்பமடா என்று வாழ்ந்து தீர்த்த இந்திய மகாராஜாக்கள் ஏராளம் . பிரிட்டிஷாரிடம் இந்தியா அடிமைப்பட்டதற்கு முக்கியக் காரணமான இந்த ‘ முந்தைய அத்தியாயம் ‘ ஒரு புதைபொருள் . அதுவே இந்தப் புத்தகம் .
    தன் ‘ வளர்ப்பு ‘ நாய்க்கு கோலாகலமாகத் திருமணம் செய்துவைத்த மகாராஜா முதல் மன்னர் மானியத்தையும் இழந்து மாதச்சம்பளத்துக்கு வேலைக்குச் சென்ற ராஜா வரை – இந்தப் புத்தகம் விவரிக்கும் சரித்திரம் நீண்டது . நெடியது . ஹைதராபாத் , பரோடா . மைசூர் , ஜெய்ப்பூர் , காஷ்மீர் , புதுக்கோட்டை , பாட்டியாலா , நபா , கபுர்தலா , இந்தூர் , ஜோத்பூர் , தோல்பூர் , பரத்பூர் , அல்வார் , பஹவல்பூர் , ஜூனாகத் உள்ளிட்ட அநேக முக்கிய சமஸ்தானங்கள் ஜொலிஜொலித்த கதை முதல் அழித்தொழிக்கப்பட்ட அரசியல் வரை இதில் விவரிக்கப்பட்டுள்ளன .
    மகாராஜாவின் மணிமகுடத்தில் ஜொலித்த ரத்தினக்கல்லின் சிகப்புக்கும் அவரது சிம்மாசனத்தின் அடியில் சிதறிக்கிடந்த மக்களின் ரத்தத்துக்கும் நேரடித் தொடர்பு இருக்கிறது . அதனால்தான் , யாரங்கே என்று அதட்டும் மகாராஜாக்களின் வாழ்க்கை முறையை மட்டுமல்லாமல் , வந்தேன் மன்னா என்று முதுகை வளைத்து ஓடிவரும் சேவகர்களின் வாழ்க்கையும் இதில் சொல்லப்பட்டிருக்கிறது .
    முகிலின் இந்தப் புத்தகம் , அரண்மனை வாயில் வழியே உங்களை அழைத்துச்சென்று , அந்தப்புரத்தின் பின்கதவு வரை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது . இந்திய சமஸ்தானங்கள் குறித்து தமிழில் எழுதப்பட்டுள்ள முதன்மையான , முக்கியமான பதிவு
  • Out Of Stock SAVE 7%
    Read more

    இந்துத்வ இயக்க வரலாறு / Hinduthuva Iyakka Varalaru

    999 929
    இன்றைய இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் , மதச்சக்தியாகத் திகழும் இந்துத்வத்தின் வரலாறு .
    இந்துத்வ இயக்கத்தின் அரசியல் வரலாறு ஆரிய சமாஜத்தை ஆரம்பித்த தயானந்த சரஸ்வதியிடம் இருந்து தொடங்குகிறது . திலகர் , சாவர்க்கர் , ஹெட்கேவார் . கோல்வால்கர் , சியாமா பிரசாத் முகர்ஜி , தீனதயாள் உபாத்யாயா , வாஜ்பாய் , அத்வானி என்று தொடரும் அந்தப் பாரம்பரியம் இன்று நரேந்திர மோடியின் அசாதாரண எழுச்சியின் மூலம் ஒரு புதிய பரிமாணத்தை எட்டியிருக்கிறது .
    இந்துத்வத்தின் இத்தகைய வளர்ச்சிப்போக்கை மிக விரிவான களப் பின்னணியோடு பொருத்தி ஆராய்வது இன்றைய அவசர , அவசியத் தேவை . அதனை உணர்ந்து , சிப்பாய் புரட்சி , இந்து மகா சபாவின் ஆரம்பம் , ஆர்.எஸ்.எஸ்ஸின் தோற்றுவாய் , இந்தியப் பிரிவினை , ஜனசங்கத்தின் உருவாக்கம் , எமர்ஜென்ஸியில் இந்துத்வ இயக்கங்கள் எதிர்கொண்ட சவால்கள் , ஜனதா ஆட்சியைப் பிடித்த விதம் , பாஜக உருவான கதை . ஆட்சியதிகாரத்தில் இந்துத்வம் என்று இந்துத்வ அரசியலின் அதிமுக்கிய அசைவுகளைத் துல்லியமான தரவுகளுடன் பதிவுசெய்கிறது இந்தப் புத்தகம் .
    காந்தி படுகொலை , காமராஜர் கொலைமுயற்சி , மீனாட்சிபுரம் மதமாற்றம் , மண்டைக்காடு கலவரம் , ரத யாத்திரை , பாபர் மசூதி இடிப்பு , பொடா சட்டம் , கோத்ரா ரயில் எரிப்பு , குஜராத் கலவரம் என்று இந்துத்துவ அரசியலின் சர்ச்சைக்குரிய நிகழ்வுகளுக்குப் பின்னால் இருக்கும் மெய்யான அரசியலை விவரிக்கும் இந்தப் புத்தகம் . இந்துத்வ அரசியலின் எழுச்சி , வீழ்ச்சி , மீட்சியைத் தகுந்த வரலாற்றுப் பின்புலத்தோடு அழுத்தமாகப் பதிவு செய்கிறது .
    இந்திய , தமிழக அரசியல் களத்தைத் தொடர்ச்சியாக ஆய்வு செய்துவரும் ஆர் . முத்துக்குமாரின் இந்தப் புத்தகம் சமகால இந்தியாவின் இன்னொரு பரிமாணத்தின் மீது புதிய வெளிச்சம் பாய்ச்சுகிறது .
    தமிழக அரசியல் வாரமிருமுறை இதழில் வெளியான அயோத்தி … ஆர்.எஸ்.எஸ் .. இந்துத்வா தொடரின் நூல் வடிவம் .
  • Out Of Stock SAVE 7%
    Read more

    சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம் / Chanakkiyarin Artha Sasthiram

    460 428
    இந்தியாவின் மிகப்பழமையான ‘ அர்த்த சாஸ்திரம் ‘ நூலை எழுதியவர் என்பது சாணக்கியரின் ஆகப்பெரிய அடையாளம் , இது 380 கலோகங்கள் கொண்ட நூல் . சாணக்கியர் சிறந்த அரசியல் மேதை , சிந்தனையாளர் , சாணக்கியரில் தொடங்குகிறது இந்திய அரசியலின் புதிய சிந்தனை . அந்நாளைய தட்சசீலப் பல்கலைக் கழகத்தில் பொருளாதாரமும் அரசியலும் போதித்த பேராசிரியர் சாணக்கியர் . இந்தியத் துணைக்கண்டத்தின் பெரும் பகுதியை உள்ளடக்கிய மவுரிய சாம்ராஜ்யத்தை நிறுவியதில் முக்கியப் பங்காற்றியவரும்கூட . முக்கியமாக , மவுரிய மன்னன் சந்திர குப்தனுக்கும் , அவரது மகன் பிந்துசாரனுக்கும் ஆலோசகராக இருந்திருக்கிறார் சாணக்கியர் . சாணக்கியருக்கு விஷ்ணு குப்தர் , கௌடில்யர் என்கிற பெயர்களும் உண்டு .
    அர்த்த சாஸ்திரம் இன்று நாம் வியந்து பாராட்டுகிற , தயங்காமல் சிந்திக்கிற ஒரு கலவையாக இருக்கிறது . அரசு நிர்வாகம் , பொருளாதாரம் பற்றிப் பேசுகிற இந்நூல் , அரசனின் கடமைகள் , பொறுப்புகள் தொடங்கி கீழ்மட்ட அலுவலர்களின் பணிகள் வரை விவரிக்கிறது . சட்டம் , நீதி , குற்றம் , தண்டனை , குடிமக்கள் நலன் என்று பல அம்சங்களையும் உள்ளடக்கிய நூல் அர்த்த சாஸ்திரம் .
    ஒரு பேரரசை வீழ்த்தி இன்னொரு பேரரசை உருவாக்கியது சாணக்கியரின் விவேகமும் துணிவும் விடாமுயற்சியும்தான் . அவரது அரசியல் வியூகங்களின் காரணமாகவே இன்றளவும் தலைசிறந்த ராஜதந்திரியாக அவர் போற்றப்படுகிறார் .
  • Out Of Stock SAVE 7%
    Read more

    சிறகை விரிப்போம் / Siragai Virippom

    188 175
    வானொலி மூலம் வரலாறு படைத்தவர் . தமிழகத்தின் பட்டிதொட்டி முதல் பட்டணம்வரை சராசரி முதல் பிரபலங்கள்வரை … அறிமுகம் ஆனவர் . பல்லாண்டுக் காலத் தொடர்ச்சியான முயற்சியால் பெரும்புகழ் பெற்றவர் தென்கச்சி கோ . சுவாமிநாதன் . கிராமியமான குரல் . எப்போது சிரிக்கலாம் என்று நம்மைத் தயாராக வைத்திருக்கும் பேச்சுப் பாணி . உலகம் முதல் உலோகம்வரை , மருத்துவம் முதல் மகத்துவம்வரை தினம்தோறும் வானொலியில் வாரி வழங்கும் வள்ளன்மை . பெரிய பெரிய விஷயங்களைக் கூடத் தெருவோரத்துக் கடையில் மசால் வடை போடும் அலட்சியத்தில் வாரிக் கொட்டுகிற வார்த்தை வளம் . பல்லாண்டுக் காலத் தொடர் முயற்சி … தொடர்ச்சி … வளர்ச்சி என்கிற மூலமந்திரத்தின் சொந்தக்காரர் தென்கச்சி கோ . சுவாமிநாதன் . வயலும் வாழ்வுக்குமான உபகரணங்களை வைத்துக் கொண்டு பொக்ரான் அணுகுண்டு வெடிக்கும் வித்தியாசமான விவசாய விஞ்ஞானி . ஒற்றை மனிதர் ; ஆனால் வெற்றி மனிதர் .
    வெற்றி நிச்சயம் நூலில் – சொல்வேந்தர் சுகி . சிவம்
  • Out Of Stock SAVE 7%
    Read more

    பயண சரித்திரம் / Payana Sariththiram

    420 391
    உலகம் தட்டையானது என்ற மனிதனின் அறியாமையைப் பயணங்களே தகர்த்தெறிந்தன .
    கண்ணுக்கெட்டிய தொலைவோடு கடலும் , உலகின் எல்லையும் முடிகிறது என்றே நம்பிக் கொண்டிருந்தான் ஆதி மனிதன் . கண்ணுக்குக் கரை தெரியும் தூரத்தில் பாதுகாப்பாகவே அன்றைய கடல் பயணங்கள் நிகழ்ந்தன . கடலுக்குள்ளிருந்து ராட்சத விலங்கு திடீரெனத் தோன்றி கபளீகரம் செய்துவிடும் என்ற பயம் எப்போதும் மனிதனுக்கு இருந்தது . தயக்கத்தையும் பயத்தையும் மீறி , தேவைகளினால் புதிய எல்லைகளைத் தேடி அவனது பயணங்கள் விரிந்தபோது புவியியலின் ரகசியங்கள் பிடிபட ஆரம்பித்தன . பயணங்களே உலகின் வரைபடத்துக்கு உயிர் கொடுத்தன .
    பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே கடல் பயணங்களில் அசகாய சூரர்களாக விளங்கிய பாலிநேசியர்கள் , கிறித்துவுக்கு முந்தைய காலத்திலேயே கப்பல் கட்டுவதில் கணவான்களாகத் திகழ்ந்த பெனிஸீயர்கள் , சூரியன் உதிக்கும் இடத்தைக் கண்டறியக் கிளம்பிய அலெக்ஸாண்டர் , புத்தரின் தரிசனங்களைத் தேடி நிகழ்த்திய பயணங்களால் அழியாத சரித்திரத்தைப் பதிவு செய்த ஃபாஹியான் மற்றும் யுவான் சுவாங் , இரக்கமற்ற கொள்ளையர்கள் என்றாலும் பத்தாம் நூற்றாண்டிலேயே வட அமெரிக்கக் கண்டத்தில் குடியேறிச் சாதித்த வைகிங்குகள் , அன்றைய வெனிஸ் முதல் மயிலாப்பூர் வரை நமக்குக் காட்சிப்படுத்தும் மார்க்கோ போலோ , மெக்கா பயணத்துக்குக் கிளம்பி துக்ளக்கிடம் சிக்கி , தன் அனுபவங்களை திக் திக்கென விவரிக்கும் இபின் பதூதா , அதிகம் அறியப்படாத ஆச்சரியப் பயணி ஸெங் ஹே … இப்படி இந்தப் புத்தகம் பேசும் சுவாரசியப் பயணங்கள் ஏராளம் .
    இவை பயணிகளின் / பயணங்களின் குறிப்புகள் மட்டுமல்ல . அந்தந்த நூற்றாண்டுகளில் உலகின் சரித்திரத்தைப் பதிவு செய்யும் ஆவணமும்கூட .
  • Out Of Stock SAVE 7%
    Read more

    லியோ டால்ஸ்டாய் கதைகள் / Leo Tolstoy Kadhaigal

    140 130
    லியோ டால்ஸ்டாய் என்று அழைக்கப்படும் இவர் 1828 இல் பிறந்தார் .
    டால்ஸ்டாய் செல்வக் குடியிலே பிறந்திருந்தாலும் அவருடைய வாழ்க்கை ஒரு சோகக்கதையாகவே இருந்தது . டால்ஸ்டாய் படிப்பில் சூட்டிகையானவராக இருக்கவில்லை .
    ஆனால் இவருக்கு தனது தாய் மொழியான ருஷ்ய மொழி தவிர பிரெஞ்சு , ஆங்கிலம் , ஜெர்மன் , போலீஷ் , செக் , பல்கேரியா , டாடார் . இத்தாலி , அராபி , டச்சு , இலத்தீன் , கிரேக் , ஹெப்ரியூ இந்த மொழிகளிலும் நல்ல தேர்ச்சி இருந்தது . அதனால் இம்மொழிகளிலுள்ள எழுத்தாளர்களின் படைப்புகளை யெல்லாம் வாசிக்கும் பேறு பெற்றார் . அவற்றை ஆராயவும் செய்தார் .
    தான் கற்றறிந்த , கேட்டறிந்த வாழ்க்கை நெறிகளை வாழ்க்கையில் பின்பற்றவும் முயன்றார் . ஆனால் அவர் வாழ்க்கை முள் பாதையாகத்தானிருந்தது . ஆனாலும் அவர் அஹிம்சா நெறியைக் கடைப்பிடித்தார் .
    டால்ஸ்டாய் மேலை நாட்டில் தோன்றிய மிகத் தெளிவான சிந்தனையாளர்களில் ஒருவர் . ஒப்பற்ற நூலாசிரியர்களில் இவரும் ஒருவர் என்று இவரைப்பற்றி வர்ணிக்கிறார் காந்தியடிகள் .
    ‘ உனக்குத் தீமையைச் செய்தவருக்கும் நன்மையே செய் ‘ என்றார் புத்தர் .
    இவர்களின் கருத்துக்களைத்தான் டால்ஸ்டாயும் தன் கதைகளில் வலியுறுத்தியுள்ளார் .
    உலகின் தலை சிறந்த எழுத்தாளர்களில் ஒருவராகப் போற்றப்படும் டால்ஸ்டாய் தன் வாழ்நாளின் பெரும் பகுதியை , ஐம்பது வருடங்களை இலக்கியப் பணிக்கென்றே அர்ப்பணித்தார் . கதைகள் , குட்டிக்கதைகள் , புதினம் , நாடகம் , கட்டுரை என்று இவர் தடம் பதிக்காத துறையே இல்லை .
    அவருடைய நீதிக்கதைகளில் சில இப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன . சிறுவர் முதல் பெரியவர் வரை படித்து மகிழத்தக்க அருமையான பொக்கிஷம் அவரது கதைகள் என்றால் மிகையாகாது , நீங்களும் இவற்றைப் படியுங்கள் . மகிழுங்கள் .
  • Out Of Stock SAVE 7%
    Read more

    லீ குவான் யூ / Lee Kuan Yew

    244 227

    லீ குவான் யூ வழக்குரைஞர் பட்டம் பெற்றது கேம்பிரிட்ஜில் . அங்கிருந்த பேராசிரியர்கள் இனபேதம் பார்க்கவில்லை . ஆனால் விளையாட்டுத்திடல் , பேருந்து , உணவுவிடுதி , வியாபார ஸ்தலங்கள் இங்கெல்லாம் மற்றவர்களால் ஆசியர்கள் நடத்தப்பட்ட விதம் கண்டு லீ கொதித்தார் . என்னதான் இங்கிலாந்தின் கட்டுப்பாடும் , நாகரீகமும் , பண்பாடும் அவரை ஈர்த்தாலும் பிரிட்டிஷ் இன வெறியர்கள் நடந்துகொண்ட விதம் அவரைத் தீவிர அரசியலை நோக்கி நகர்த்தியது . பிரிட்டிஷாரின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டு , இந்தியாவும் பாகிஸ்தானும் சுதந்தர நாடுகளாக அறிவிக்கப்பட்டதிலிருந்து அவர்களின் வேட்கையும் , வேகமும் அதிகரித்த விதம் அவருக்கு நம்பிக்கையையூட்டியது . சிங்கப்பூரில் அப்போதைக்கு ஆட்சியிலிருந்த அரசியல் கட்சி , ஏழைகளின் உழைப்பை உறிஞ்சிக் கொழுத்ததை அவர் ரசிக்கவில்லை . அதற்காக கம்யூனிச சித்தாந்தத்தையும் அவர் ஏற்கவில்லை . மாற்று அரசியலை முன்வைக்க முடிவுசெய்து மக்கள் செயல் கட்சியை ( Peoples Actions Party ) நிறுவி ஆட்சியைப் பிடித்தார் . 31 ஆண்டுகள் சிங்கப்பூரின் பிரதமராக இருந்த காலத்தில் தரைமட்டமாகக் கிடந்த சிங்கப்பூரை வானுயர்ந்த கோபுரமாக மாற்றியமைத்தார் . சிங்கப்பூர் உலக வர்த்தகத்தின் மையப் புள்ளியானது இவரது தீர்க்க தரிசனத்தால்தான் . நவீன சிங்கப்பூரின் ஒவ்வொரு அங்குலமும் இவருடைய பெயரைத்தான் ஜெபித்துக்கொண்டிருக்கிறது .
    தேசத் தந்தையாக சிங்கப்பூர் மக்களால் போற்றப்படுகிறார் லீ குவான் யூ . அவரது வாழ்க்கையின் அடிநாதமாக இருக்கும் முக்கியமான விஷயங்கள் அனைத்தும் இந்த நூலில் நான்கு பாகங்களில் விவரிக்கப்பட்டிருக்கிறது . லீ குவான் யூவின் ஆரம்ப வாழ்க்கைத் தொடங்கி அவருடைய கல்வி , அரசியல் நுழைவு , அவருடைய இலக்கு , அதை அடைய அவர் எதிர்கொண்ட சவால்கள் , அவருடைய கம்யூனிச எதிர்ப்பின் பின்னணி , தமிழர்கள் மீது அவர் அன்பு காட்டுவதற்கான காரணம் இவை அனைத்துக்கும் விடை சொல்கிறது இந்தப் புத்தகம் .

  • SAVE 7%
    Add to cart

    வெற்றி நிச்சயம் / Vetri Nichayam

    222 206
    உங்களுக்குத் தெரிந்த ஒவ்வொருவரையும் வெற்றியாளர் ஆக்குவதற்கு உங்களுக்குக் கிடைத்திருக்கும் மந்திரகோல் இது . மாய விளக்கும் கூட . இருந்தாலும் மூடத்தனமாக மந்திர தந்திரங்களின் மேல் நம்பிக்கை வைக்காமல் உங்களை நம்பி முன்னேறுவதற்கே இதைப் பயன்படுத்துங்கள் . உள்ளுக்குள் ஆற்றல் இல்லாத மனிதன் என்று யாரும் கிடையாது . ஆனால் அப்படி ஒரு சக்தி உங்களுக்குள் இருக்கிறது என்பதையே நீங்கள் உணராமல் இருக்கலாம் . கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு நீங்கள் அலைய வேண்டியதில்லை .
    உங்களிடம் உள்ள ஆற்றல்தான் வெண்ணெய் . உங்களுக்கு வெற்றி என்ற நெய் தேவைப்படுகிறது . வெண்ணெயை எப்படி நெய்யாக மாற்ற வேண்டும் என்கிற வழிமுறை மட்டும் தெரிந்து விட்டால் நீங்கள் உங்களது தேவையை நிறைவேற்றிக் கொள்ளப் போகிறீர்கள் . இதனால் உங்களது வெற்றி உங்கள் மடியின் மீது வந்து விழும் . ஆகவே உங்களைப் போல உள்ள லட்சக்கணக்கானவர்களுக்கு வெற்றிக்கான வழி என்ன என்பதைக் கற்றுக் கொடுத்து விட்டால் அதன்பின் நீங்கள் வானத்தையே வில்லாக வளைப்பீர்கள் .
    பாதையைப் போட்டுக் கொடுத்து விட்டால் அதில் பயணம் செய்வது எளிது . அப்படியொரு பாதையை அமைக்கும் முயற்சிதான் இந்தப் புத்தகம் .