Showing all 14 results
-
Add to cart
அஞ்ஞாடி / Agngnaadi
₹1,100₹1,023கடந்தகாலத்தில் நிகழ்ந்ததாகக் கூறிக்கொண்டு வாராவாரம் கிளுகிளுப்புக்காக எழுதப்பட்டு வருஷக் கணக்கில் வந்ததெல்லாம் வெறும் சரித்திரக் கதைகள்தான் . ‘ அஞ்ஞாடி … ‘ தான் உண்மையில் தமிழின் முதல் வரலாற்று நாவல் …பூமணியின் மொழிக் கட்டுப்பாடு . பூமணிக்குள் ஒரு தேர்ந்த எடிட்டரும் தொடர்ந்து வேலைசெய்து கொண்டிருப்பதால் ‘ சொகமாக ‘ – நாவலில் மீண்டும் மீண்டும் வரும் வார்த்தை இது – நாவலை வாசித்துக்கொண்டே போகலாம் . இதுதான் மொழிக்கு , பண்பாட்டுக்கு படைப்பாளியின் கொடை . ஒரு படைப்பாளிக்கான சவாலை எதிர்கொண்டு தமிழில் இருந்துவந்த சமீபத்திய இடைவெளியை முழுமையாக நிரப்ப இந்த நாவல் புதிய சவால்களை விமர்சகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் உருவாக்கியிருக்கிறது . -
Add to cart
எங் கதெ / En Kathe
₹135₹126இமையத்தின் இந்த நெடுங்கதையில் ஆண் – பெண் உறவின் ஒரு பரிமாணம் முழு ஆவேசத்துடன் பேச்சு மொழியில் பெருக்கெடுக்கிறது . இமையத்தின் படைப்புகள் அனைத்திலிருந்தும் வேறுபட்ட களம் ; வேறுபட்ட நடை .
-
Add to cart
கொலைச்சேவல் / Kolaichcheval
₹230₹214கொலைச் சேவல் ’ இமையத்தின் மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு . வெவ்வேறு விதமான கதைகளாக இவை தோற்றம் கொண்டிருந்தாலும் நவீன வாழ்க்கையை எதிர்கொள்ளும் கிராமத்துக் கிழவி ஒருத்தியின் மனம் இந்தக் கதைகளின் இடையே இழையோடுவதை நம்மால் உணர முடியும் . புலம்பல்களின் கலை வடிவம் என்று இந்தக் கதைகளில் சிலவற்றை நாம் கூறலாம் . புலம்பல்கள் சில நேரங்களில் மறைமுகமான சமூக விமர்சனங்களாகவும் செயல்படுவதை இமையத்தின் இந்தக் கதைகளில் நாம் காணலாம் .
-
Read more
செல்லாத பணம் / Sellaatha Panam
₹345₹321நாவலில் உணர்வு என்றும் , சிந்தனை என்றும் ஒவ்வொன்றும் தன்னைத் தனித்தனியாக அடையாளம் காட்டிக்கொண்டு வருவதில்லை . இரண்டின் கலவை என்றும் எதையும் சொல்ல முடியாது . அங்கே இருப்பது ஒரு அனுபவத்தின் முழுமை , உண்மையான மனித அனுபவத்தின் முழுமை …
வெறும் சிந்தனை நாவலாகாது என்பதைப் போலவே உணர்வு மட்டுமே நாவலாகாது . ‘ செல்லாத பணம் ‘ படைப்பில் மனித அனுபவத்தின் முழுமை உண்டு . நமக்குத் தெரிந்த சிந்தனைச் சட்டகத்துள் அதைக் கொண்டுவந்து ஒழுங்குப்படுத்திவிட முடியாது . இந்த அனுபவத்தின் முழுமையிலும் ஒரு சிந்தனை , தார்மீக நிலைப்பாடு போன்றவை தெரியலாம் . ஆனால் , அவை சிந்தனையின் வழக்கமான தன்மையைக் கொண்டிருப்பவை அல்ல . சிந்தனையின் மெய்வருத்தம் அனுபவத்தின் முழுமையைச் சிதைத்துவிடாதவாறு பார்த்துக்கொள்வதுதான் செல்லாத பணத்தின் சிறப்பு .
தங்க.ஜெயராமன் -
Add to cart
பின்கட்டு / Pinkattu
₹90₹84தமிழ்ப் பத்திரிகைகளின் தரம் அல்லது தரமின்மை என்ற பாதிப்புக்கு உள்ளாகாமல் எழுதப்பட்ட கதைகள் இவை … இக்கதைகளைப் பிரசுரிக்கிற திராணி உள்ள தமிழ்ப் பத்திரிகை எதுவும் இன்றையச் சூழ்நிலையில் இருப்பதாகப்படவில்லை . பத்திரிகைகளின் பந்த நிர்பந்தங்களை மீறியும் , இலக்கிய பூர்வமாகவும் சிந்திக்கிற நான்கு பேர் தாங்களாகவே வெளியிட்டிருக்கிற சிறுகதைத் தொகுப்பு இது . தப்பித்தவறி ஒன்றிரண்டு பிரசுரிக்கப்படுகிற வாய்ப்பு உண்டு என்று யாரேனும் சொல்வீர்களேயானால் , அது பத்திரிகை ஆசிரியர்களும் சமயங்களில் அவர்கள் அகராதிப்படி நிதானம் இழக்கக்கூடும் என்பதைத்தான் நிரூபிக்குமே அன்றி அவர்களின் இலக்கியப் பிரக்ஞையை நிரூபிக்காது …மனித சமூகத்தில் அநேகம் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பினும் வாழ்வின் அடிப்படை குணாதிசயங்கள் , மதிப்பீடுகள் , அவ்வளவாக மாறவில்லை என்றே சொல்ல வேண்டும் .இக்குணாதிசயங்களை , மதிப்பீடுகளைப் புரிந்துகொள்கிற கலைஞன் , வாழ்வின் சாராம்சத்தைப் புரிந்துகொண்டவன் ஆகிறான் . அவனது சிருஷ்டிகள் உயிர்த்துடிப்பும் , அர்த்த புஷ்டியும் நிரம்பப்பெறுகின்றன . அவை சமகாலத்திற்கு மட்டுமல்லாமல் மனித பரம்பரைக்கே உரியனவாய் ஸ்தாபிதம் பெறுகின்றன .ஐராவதம் ஆர்.சுவாமிநாதன்‘ கோணல்கள் ’ தொகுப்பின்முன்னுரையில் ( 1968 ) -
Read more
மண்பாரம் / Manbaaram
₹270₹251இமையத்தின் கதைகளின் பாத்திரங்கள் … ஒடுக்கப்பட்ட ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் . அவர்களுடைய வாழ்க்கை அவர்களுடைய கையில் இல்லை . அது மேல்ஜாதியினரின் , மேல்வர்க்கத்தினரின் அதிகாரக் கரங்களில் அடகுவைக்கப்பட்ட வாழ்க்கை ; அன்றாட ஜீவனத்துக்கு அல்லல்படும் வறுமை வாழ்க்கை ; மனித மரியாதை இல்லாத வாழ்க்கை . இந்த நடைமுறை வாழ்க்கையை இமையம் கதை யாக்குகிறார் . அவர் வறுமையைக் கதைகளின் கருவாக்கவில்லை ; வறுமையைக் கதைகளின் பின்புலமாக்குகிறார் .இந்தக் கதைகளின் சிறப்பை இலக்கியத் தோரணைகள் , இலக்கிய உத்திகள் நிர்ணயிக்கவில்லை . அறிவுபூர்வமாகத் தெரிந்தெடுத்த சமூகத் தத்துவங்கள் நிர்ணயிக்கவில்லை . அதை யதார்த்தமான வாழ்க்கை நிர்ணயிக்கிறது . கதையின் சிறப்பு நிஜத்தின் சிறப்பு . கதைகள் சொல்லும் நிஜ வாழ்க்கையைப் போல , அலங்காரம் இல்லாமலே 99 கதைகளும் நிஜ வடிவம் எடுக்கின்றன . -
Add to cart
மெர்சோ மறுவிசாரணை / Merso Maruvisaranai
₹195₹181“ ஆல்பெர் காம்யு எழுதிய ‘ அந்நியன் ’ நாவலின் தொடர்ச்சியாகவும் , அதன் மறுபக்கமாகவும் , எதிரொலியாகவும் அமைந்திருக்கும் ‘ மெர்சோ : மறுவிசாரணை ’ ‘ அந்நியன் ’ நாவலைப் படித்த ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய படைப்பு .அல்ஜீரிய எழுத்தாளர் காமெல் தாவுதுடைய எழுத்தின் துணிச்சலும் , சவாலும் , இவரிடம் காணப்படும் பிரெஞ்சு மொழி ஆளுமையும் பிரான்ஸில் இவருக்குப் பல இலக்கிய விருதுகளைப் பெற்றுத்தந்திருக்கின்றன ; இந்த நாவல் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்படவும் இவை காரணமாக இருந்திருக்கின்றன . ” -
Add to cart
வீடியோ மாரியம்மன் / Video Mariamman
₹195₹181ஒண்ணெ ஒண்ணுதான் எம் மனசிலெ இருக்கு . நான் செத்தா எம் பொணத்த ஊரு மெச்ச எடுக்கணும் . தேர்ப் பாடெ கட்டு . ஒப்பனுக்குக் கட்டுனாப்ல . உள்ளூர்ப் பற மோளத்தோட , பாசாரு தம்ரு மோளமும் வை . பாடெ மத்தியிலெ கொல்லுக் காசி பிரிக்கயிலெ கைகூசாம தோட்டி , தொம்பன் , வண்ணான் , கூத்தாடின்னு ஒருவரும் மனங்கோணக் கூடாது . கேட்ட காசியக் கொடுத்துப்புடு . கசம்பன்னு பேரு எடுக்காத . நம்ப ஊட்டுலெ எஞ் சாவுதான் கடேசி சாவு . அதனால் , வாண ணவெடி வுடு . கயிதூரு ஆட்டக்காரி செடலோட ஆட்டம் வை . ராத்திரிக்குக் கர்ணமோட்சம் கூத்து வைக்காம வுட்டுப்புடாத .