Showing 1–16 of 195 results
-
Read more
1877 Thathu Varuda Pancham/1877 : தாது வருடப் பஞ்சம்
₹250₹233உறையச் செய்யும் ஒரு வரலாற்று ஆவணம். நம் மனசாட்சியை உலுக்கியெடுக்கும் நேரடி வாக்குமூலம். இப்போது உச்சரித்தாலும் உடலையும் உள்ளத்தையும் ஒருசேர நடுநடுங்கச் செய்யும் சொல், பஞ்சம். கடந்து போய்விட்ட பஞ்சங்களும்கூட நினைவுகளாக, கதைகளாக, உணர்வுகளாக உயிர்த்திருக்கின்றன. வரலாற்றுப் பதிவுகள்தான் குறைவு. அபூர்வமாக எஞ்சி நிற்கும் நூல்களில் ஒன்று, வில்லியம் டிக்பி எனும் ஆங்கிலேய எழுத்தாளரின் நேரடிப் பதிவு. 1877ஆம் ஆண்டு தென்னிந்தியாவில் வெடித்த மாபெரும் பஞ்சத்தின் அவல வரலாற்றை அருகிலிருந்து கண்டும் உணர்ந்தும் எழுதியிருக்கிறார் டிக்பி. மக்களின் துயர்மிகு வலிகளைப் பதிவு செய்வதோடு நிறுத்திக்கொள்ளாமல் ஆங்கிலேய அரசு பஞ்சத்தை எதிர்கொண்ட விதத்தைக் கூர்மையாகவும் நேர்மையாகவும் விமரிசனத்துக்கு உட்படுத்துகிறார் நூலாசிரியர். உயிரே போனாலும் சாதிப் பற்றை விட்டுக்கொடுக்காத விநோத மனிதர்களின் கதையும் இதில் உண்டு. இது பஞ்சத்தின் கதை. இந்தியாவின் கதை. நம் மனசாட்சியைக் குத்திக் கிளறிவிடும் வரலாற்றின் கதையும்கூட.
-
Add to cart
Aathichudi Panmuga Panpaattu Paarvaiyil Orr Arimugam/ஆத்திச்சூடி – பன்முக பண்பாட்டுப் பார்வையில் ஓர் அறிமுகம்
₹140₹130ஔவையாரின் ஆத்திசூடி தமிழ் கற்க விரும்பும் குழந்தைகளுக்கான பாடல் நூல் மட்டுமல்ல. தமிழ்ப் பண்பாட்டை, தமிழ் நாகரிகத்தை, தமிழர் வாழ்வை அறிமுகம் செய்து வைக்கும் ஒரு வளமான புதையலும்கூட. ஆத்திசூடியில் இடம்பெற்றுள்ள 109 பொன்மொழிகளையும் எளிமையாக அறிமுகப்படுத்துவதோடு நின்றுவிடாமல் கிறிஸ்தவம், இஸ்லாம், பௌத்தம் ஆகிய மரபுகளில் இடம்பெற்றுள்ள பொருத்தமான பார்வைகளைத் திரட்டி ஒவ்வொரு பொன்மொழிக்கும் ஒளி சேர்க்கிறது இந்நூல். கூடவே சிந்தனையாளர்கள், சீர்திருத்தவாதிகள், முக்கிய தமிழ் ஆளுமைகள் ஆகியோரின் சொற்களும் பொருத்தமாக இடம்பெற்றிருக்கின்றன. தமிழர் மாண்பை எடுத்துக்காட்டும் பொருத்தமான படங்கள் ஒவ்வொரு பக்கத்திலும் இடம்பெற்றிருக்கின்றன. ஒவ்வொரு தமிழரும் தங்கள் குழந்தைகளுக்கு வாங்கிப் பரிசளிக்கவேண்டிய அற்புதமான தொகுப்பு.
-
Add to cart
Aatkolli Vilangu /ஆட்கொல்லி விலங்கு
₹200₹186அடுத்து என்ன, அடுத்து என்ன என்று பரபரப்போடு பக்கங்களைப் புரட்ட வைக்கும் பலவிதமான சாகச அனுபவங்கள் அடுத்தடுத்து இந்நூலில் விரிகின்றன.
ஒரு புலி எந்தப் புள்ளியில் ஆட்கொல்லி விலங்காக உருமாறுகிறது? அது எவ்வாறு மனிதர்களை வேட்டையாடுகிறது? வனத்தில் வாழும் ஒரு சிறுத்தை ஏன் மனிதர்கள்மீது பாயவேண்டும்?
ஒரு வேட்டை எவ்வாறு படிப்படியாகத் திட்டமிடப்படுகிறது? ஓர் ஆட்கொல்லி விலங்கின் இருப்பிடம் எவ்வாறு கண்டுபிடிக்கப்படுகிறது? விலங்கு வரும்வரை எப்படிப் பதுங்கியிருக்கவேண்டும்? காட்டிலும் மேட்டிலும் என்னென்ன வகையான ஆபத்துகள் காத்திருக்கும்? தேடிப்போன விலங்கு கண்முன்னால் திரண்டு நிற்கும் அந்தக் கணத்தில் என்ன நடக்கிறது?அடுத்து எந்த விலங்கு தோன்றுமோ எப்படித் தாக்குமோ என்று அச்சத்தில் உறைந்துகிடக்கும் கிராமத்து மக்களை மீட்டெடுக்க கென்னத் ஆண்டர்சன் தனது வேட்டையைத் தொடங்குகிறார்.
மனிதன் இயற்கையின்மீது பெரும் போர் தொடுக்கிறான்.இயற்கை பதிலுக்கு மனிதனை வேட்டையாடத் தொடங்குகிறது. இந்தப் போரில் வெல்லப்போவது யார்?
-
Add to cart
Alla Alla Panam 7 – Thangam/அள்ள அள்ளப் பணம்-7 : தங்கம்-வெள்ளி-பிட்காயின்
₹225₹209“ஆசைக்கு – முதலீட்டுக்கு – வர்த்தகத்துக்கு
· தங்கத்தில் முதலீடு செய்வது எப்படி? அது எந்த அளவுக்குப் பயனுள்ளதாக இருக்கும்?
· நகைகள், தங்க காசுகள், இ-கோல்ட், கோல்ட் பாண்டுகள், கோல்ட் இ.டி.எஃப்கள், கமாடிட்டி கோல்ட், கோல்ட் மானிட்டைசேஷன் ஸ்கீம் – எதில் எவ்வளவு முதலீடு செய்வது?
· தங்கத்தின் விலை எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது? அது ஏன் தொடர்ச்சியாக மாறிக்கொண்டே இருக்கிறது?
· தங்கம் போலவே வெள்ளியிலும் பிட்காயினிலும் முதலீடு செய்வது உசிதமா?
· கிரிப்டோகரன்சி என்பது என்ன? பிட்காயின் வேறு கிரிப்டோகரன்சிகள் வேறா? வர்த்தகத்தில் ஈடுபடும் அனைவரும் கிரிப்டோகரன்சி குறித்து தெரிந்து கொள்ளவேண்டுமா?தங்கம், வெள்ளி, கிரிப்டோகரன்சி மூன்றையும் குறித்த மிகத் தெளிவான, மிக விரிவான அறிமுகத்தையும் எதில் எவ்வளவு முதலீடு செய்வது என்பதையும் மிகத் தெளிவாக விளக்கி இருக்கிறார் சோம. வள்ளியப்பன். ‘அள்ள அள்ளப் பணம்’ புத்தக வரிசை மூலம் பங்குச்சந்தை உலகின் அத்தனை நுணுக்கங்களையும் எளிமையாக நமக்குக் கற்பித்தவரின் முக்கியமான நூல் இது.
வணிகம், முதலீடு, பொருளாதாரம் ஆகியவற்றில் ஆர்வமுள்ள அனைவருக்கும் இந்நூல் மிகுந்த பயனளிக்கும்.”
-
Read more
Alla Alla Panam 8 – Insurance/அள்ள அள்ளப் பணம் 8 – இன்சூரன்ஸ்
₹250₹233புகழ்பெற்ற அள்ள அள்ளப் பணம் நூல் வரிசையில் மற்றொரு முக்கிய வரவு. நிதி மேலாண்மையில் பணம் சம்பாதிப்பது என்பது ஒரு தொடக்கப் புள்ளி மட்டும்தான். சம்பாதித்த பணத்தை எப்படிப் பாதுகாப்பது? சேமிக்கும் பணத்துக்கு ஆபத்து நேர்ந்தால் அதை எவ்வாறு எதிர்கொள்வது? இழப்பைச் சந்திக்கவேண்டியிருந்தால் அதை எப்படி ஈடுகட்டுவது? இவற்றையெல்லாம் முன்கூட்டியே யூகித்து, முன்னெச்சரிக்கையோடு திட்டங்கள் வகுப்பது சாத்தியமா? இந்தக் கேள்விகளை எழுப்புவதும் அவற்றுக்கான விடைகளைத் தயாராக வைத்துக்கொள்வதும் இன்றைய சூழலில் தவிர்க்கமுடியாதவை மட்டுமல்ல, தவிர்க்கக்கூடாதவையும்கூட. பங்குச் சந்தை, பரஸ்பர நிதிகள் ஆகியவை பெறும் கவனத்தை காப்பீடு பொதுவாகப் பெறுவதில்லை. நடுத்தர வர்க்கத்தினரேகூட காப்பீடு பற்றி மிகவும் மேலோட்டமாகவே தெரிந்து வைத்திருக்கின்றனர். இந்நிலையை மாற்றுவதே இந்நூலின் நோக்கம். ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு என்று தொடங்கி அதிகம் அறியப்படாத பயணக் காப்பீடு, விபத்துக் காப்பீடு என்று பலவகையான காப்பீடுகளை விரிவாகவும் எளிமையாகவும் அறிமுகப்படுத்துகிறார் நூலாசிரியர் சோம. வள்ளியப்பன்.
-
Add to cart
America Ulnaattu Por/அமெரிக்க உள்நாட்டுப் போர்
₹260₹242அமெரிக்க வரலாற்றில் மட்டுமல்ல, உலக வரலாற்றிலும் அமெரிக்க உள்நாட்டுப் போர் ஒரு முக்கியமான திருப்புமுனை நிகழ்வு. அடிமைமுறை நீடிக்கவேண்டுமா என்னும்
கேள்வியை மையப்படுத்தி அமெரிக்கா இரு துண்டுகளாகப் பிளவுண்டு நின்று மோதிக்கொண்ட போர் இது. எந்தவொரு மனிதனும் இன்னொருவரைவிடத் தாழ்வானவர் கிடையாது என்னும் அடிப்படை மானுடக் கோட்பாட்டை உயர்த்திப் பிடிக்கும் பொருட்டு மேற்கொள்ளப்பட்ட போர் என்பதால்தான் இது நீதியின் போர் என்று அழைக்கப்படுகிறது. இந்தப் போரின் கதாநாயகனாக ஆபிரகாம் லிங்கன் திகழ்ந்தார். அவருடைய ஆட்சிக்காலத்தில் பெரும்பகுதியை இந்தப் போர் விழுங்கிவிட்டது. -
Add to cart
Ariyappadatha Christhavam Part-1 & Part-2 / அறியப்படாத கிறிஸ்தவம் (இரண்டு பகுதிகள்)
₹1,399₹1,301கிறிஸ்தவம் பற்றியும் கிறிஸ்தவர்கள் பற்றியும் நமக்கிருக்கும் மனச்சித்திரங்களையும் முன் அனுமானங்களையும் கலைத்துப்போட்டு, முற்றிலும் புதிய பார்வைகளை அளிக்கும் ஒரு கலகப் புத்தகத்தை நிவேதிதா லூயிஸ் எழுதியிருக்கிறார்.இரு பெரும் பகுதிகளில் ஆயிரம் பக்கங்களைக் கடந்து விரிகிறது இந்நூல். தென்மேற்குத் தமிழகத்தின் முள்ளூர்த்துறை முதல் திண்டிவனம் வரை; கிழக்கே புதுவை தொடங்கி மேற்கே கொடிவேரிவரை தமிழகத்தில் கிறிஸ்தவம் வேர்கொண்டு வளர்ந்த கதை இதில் விரிகிறது.விரிவான கள ஆய்வுகளை மேற்கொண்டு, பலதரப்பட்ட மக்களோடு உரையாடி, அவர்களுடைய கதைகளையும் அனுபவங்களையும் வலிகளையும் கனவுகளையும் பண்பாட்டு அடையாளங்களையும் கவனமாகத் திரட்டி இந்நூலில் அவர் தொகுத்திருக்கிறார் . -
Read more
Aryabatarin Kanidham /ஆர்யபடரின் கணிதம்
₹135₹126பண்டைய இந்தியாவின் பங்களிப்புகளைக் கணக்கில் கொள்ளாமல் வானியல், கணிதம் உள்ளிட்ட துறைகளின் வரலாற்றைக் கட்டமைக்கமுடியாது. இன்றும் நம்மை வியப்பிலாழ்த்தும் அசாத்தியமான பாய்ச்சல்களைப் பற்பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சிலர் நிகழ்த்தி இருக்கிறார்கள். அவர்களுள் ஒருவர், ஆர்யபடர்.
ஆர்யபடரின் கணிதப் படைப்புகள் (ஆர்யபடீயம்) திருக்குறள்போல் ஈரடிப் பாக்களால் கட்டமைக்கப்பட்டவை என்பதால் அவற்றை வாசிப்பதும் புரிந்துகொள்வதும் கடினம். உரைகளை நாடலாம் என்றால் அவையும் பழங்காலத்தவையே. எனில், கணிதத்தில் ஆர்வமுள்ள இன்றைய தலைமுறையினரால் ஆர்யபடரை நெருங்கவேமுடியாதா? முடியும். பத்ரி சேஷாத்ரியின் இந்நூல் ஆர்யபடரின் கணிதத்தை நமக்குப் புரியும் மொழியில், இன்றைய தேவைகளுக்கு ஏற்றாற்போல் எளிமையாக, படிப்படியாக அறிமுகப்படுத்துகிறது. ஐந்தாம் நூற்றாண்டு சூத்திரங்களையும் நவீன கணிதச் சமன்பாடுகளையும் அழகாக ஒன்றிணைக்கிறார் பத்ரி.
எண்களோடு விளையாட விரும்பும் அனைவருக்கும் இந்நூல் ஒரு பெரிய களத்தை அமைத்துக்கொடுக்கிறது. மாணவர்கள் தொடங்கி கணித ஆர்வலர்கள் வரை அனைவரும் இதிலிருந்து பயன் பெறலாம்.
-
Add to cart
Ashokar/அசோகர்
₹300₹279அசோகர் போன்ற ஒருவரை அரிதினும் அரிதாகவே
வாலாறு சந்திக்கிறது. பண்டைய காலத்தைச் சேர்ந்தவர்
என்றாலும் சிந்தனைகளும் செயல்பாடுகளும் அவரை
ஒரு நவன ஆளுமையாக நமக்கு உயர்த்திக் காட்டு
கின்றன. இந்தியாவுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த
மானுடகுல வரலாற்றிலும் ஒளிமிகுந்த காலகட்டமாகத்
திகழ்கிறது அசோகரின் ஆட்சிக்காலம்.
தம்மோடும் நமக்குப் பிறகு வரும் சந்ததியினரோடும்
விரும்பியதால்தான் தூண்களிலும்
கற்களிலும் தன் சொற்களை விட்டுச்சென்றிருக்கிறார்
அசோகர். அவர் இதயம் எவ்வளவு அகலமானது,
அவர் கனவு எவ்வளவு அற்புதமானது என்பதை அவர்
கல்வெட்டுகள் உணர்த்துகின்றன.
கடவுள், மொழி, சாதி, இனம், சமயம், கோட்பாடு
எதுவும் பொருட்டல்ல. எல்லோரும் சமம். எல்லோரும்
என் குழந்தைகள் என்று அறிவிக்கும் அசோகருக்கு
இணையாக வேறு எவரைச் சொல்லமுடியும்
நம்மால்? நிலத்தையல்ல, மக்களின் இதயத்தையே
வென்றெடுக்க விரும்புகிறேன். அதுவும் கருணையால்
மட்டும் என்கிறார் அவர்.
அசோகரையும் அவர் வாழ்ந்த காலத்தையும்
விரிவாகவும் எளிமையாகவும் இந்நூலில் அறிமுகப்
படுத்துகிறார் மருதன். தனித்து மின்னும் நட்சத்திரம்
என்று உலகம் அவரைக் கொண்டாடுவதற்கான
காரணங்கள் இந்நூல் முழுக்க நிறைந்துள்ளன. -
Add to cart
British Indiavil Pasuvadhaiyum Ethirpum /பிரிட்டிஷ் இந்தியாவில் பசுவதையும் எதிர்ப்பும்
₹150₹140பசுவதையைத் தடுப்பதென்பது இந்தியத்தன்மையை மீட்டெடுக்கும் திசையிலான பயணத்தின் முதல் காலடி. இந்திய சமூகத்துக்கு கௌரவத்தையும் புனிதத்தையும் மீட்டெடுக்க உதவும். இந்தியாவுக்குச் சுமையாக மாறியிருக்கும் அந்நிய சிந்தனைகள் மற்றும் மதிப்பீடுகளுக்கும் இந்தியாவின் பழங்காலத்து சுயமான சிந்தனை மற்றும் மதிப்பீடுகளுக்கும் 200-300 ஆண்டுகளாக நீடித்த பிரிட்டிஷ் அரசினால் சீர்குலைக்கப்பட்டவற்றைச் சுதந்தரம் பெற்றதும் தெளிவான சிந்தனையும் திடமான முயற்சிகளும் இருந்திருந்தால் மீட்டெடுத்திருக்கலாம். பசுவைப் பாதுகாத்து வளர்ச்சியைப் பரவச் செய்திருக்கலாம். இடையிலான முரண்பாடுகளை இந்தியர்கள் பிரக்ஞை பூர்வமாக உணர்ந்துகொள்ளும்போதுதான் இந்த மீட்சியும் மறுமலர்ச்சியும் சாத்தியமாகும்.
-
Add to cart
Cherar Chozhar Pandiyar Moovendar Varalaru/சேரர் சோழர் பாண்டியர்
₹275₹256பண்டைய தமிழக வரலாற்றில் ஆர்வமுள்ள அனைவருக்குமான விரிவான, எளிமையான அறிமுக நூல். தமிழகத்தின் பெரும்பகுதியை மிக நீண்ட காலத்துக்கு ஆண்டவர்கள் சேர, சோழ, பாண்டியர்கள். முதன் முறையாக சங்க காலத்தில் நமக்கு அறிமுகமாகும் மூவேந்தர்கள் 14ஆம் நூற்றாண்டுவரை தமிழகத்தில் கோலோச்சியிருப்பது உண்மையிலேயே பேரதிசயம்தான். மூவரில் வரலாற்றுத் தரவுகள் அதிகம் கொண்டிருப்பவர்கள் சோழர்கள். இதுவரை அதிகம் ஆராயப்பட்டவர்களும் அதிகம் விவாதிக்கப்பட்டவர்களும் அவர்கள்தாம். சோழர்களோடு ஒப்பிடும்போது பாண்டியர்கள் பற்றி நமக்குத் தெரிந்தவை குறைவு. சேரர்கள் பற்றி ஓர் எளிய சித்திரம் மட்டுமே நமக்குக் கிடைத்துள்ளது. அதிக தரவுகள் ஒரு வகை சவால் என்றால் குறைவான தரவுகள் இன்னொரு வகை சவால். இந்நூல் இரண்டையும் வெற்றிகரமாகக் கடந்து வந்துள்ளது. இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், கல்வெட்டுகள், செப்பேடுகள், இலக்கியப் பதிவுகள், ஆய்வாளர்களின் அலசல்கள் என்று பரந்து விரிந்த தரவுகளின் அடிப்படையில் இந்நூலைக் கட்டமைத்திருக்கிறார் எஸ். கிருஷ்ணன். மூவேந்தர்களின் வரலாற்றோடு தமிழகத்தின் நீண்ட, நெடிய வரலாறும் இதில் இணைந்துவருவதைக் காணலாம்.
-
Add to cart
Desame Uyirththu Ezhu / தேசமே உயிர்த்து எழு
₹250₹233திராவிட மயக்கம், திரைப்பட மயக்கம், குடி மயக்கம், இலவசங்கள், நடுநிலையற்றுச் செயல்படும் ஊடகங்கள் என தமிழகம் பொய்கள் மற்றும் போதையின் மயக்கத்தில் ஆழ்ந்து கிடக்கிறது.அவற்றிலிருந்து தமிழக மக்களை மீட்க, ஊராட்சி நடப்புகள் முதல் உலக நடப்புகள் வரை கை பிடித்துக் கற்றுத்தரும் நல்ல ஆசானாகவும் நோயுற்றுக் கிடக்கும் தமிழ்ச் சமூகத்தின் மீது மிகுந்த அக்கறைகொண்ட மருத்துவராகவும் டாக்டர் க.கிருஷ்ணசாமி இந்த நூலில் வெளிப்பட்டிருக்கிறார்.இந்திய ஒன்றியமென்றால் தமிழகம் ஊராட்சியா? திராவிட இயக்கங்களால் சாதியை ஒழிக்க முடிந்ததா? சமூக வலைத்தளங்களுக்குக் கட்டுப்பாடுகள் தேவையா? காஷ்மீரில் நரேந்திர மோதியும் அமித் ஷாவும் செய்தது சரியா? கீழவெண்மணியில் தேவேந்திரகுல வேளாளர்கள், புதிய கல்விக் கொள்கை, பாலஸ்தீனம் என்று விரிவாகவும் ஆழமாகவும் இன்னும் பல தலைப்புகளை துணிவோடு விவாதிக்கிறது இந்நூல்.தமிழக அரசியல் களத்தில் தனித்தன்மையுடனும் சுய சிந்தனையுடன் செயல்படும் டாக்டர் க.கிருஷ்ணசாமியின் கருத்துகள் முதல்முறையாகத் தொகுக்கப்பட்டு உங்கள் கைகளில். -
Add to cart
Gandhi Yaar/காந்தி யார்? கிழக்கு
₹175₹163100 கேள்விகள், 100 பதில்கள்! இளம் வாசகர்கள் ஒவ்வொருவருக்கும் காந்தியை அழகாகவும் தெளிவாகவும் கொண்டுசென்று சேர்க்கும் நூல். காந்தி வெளிநாட்டில் படித்தபோது என்ன கற்றுக்கொண்டார்? கல்லூரியில் அவர் எப்படிப்பட்ட மாணவர்? தென்னாப்பிரிக்காவில் அவர் என்ன செய்தார்? ஏன் இந்தியா திரும்பினார்? அவர் அடிக்கடி பயன்படுத்திய சத்தியாக்கிரகம் என்ற சொல்லை யார் உருவாக்கினார்? அவர் கிரிக்கெட் பார்ப்பாரா? சினிமா பிடிக்குமா? வாழ்க்கை, அரசியல், தத்துவம், போராட்டக்குணம், எழுத்துப்பணி, விடுதலைப் போராட்ட வாழ்க்கை என்று காந்தியோடு தொடர்புடைய அனைத்தையும் எளிய கேள்வி பதில் பாணியில் இந்நூல் நமக்கு அறிமுகம் செய்கிறது. இதைவிடவும் எளிமையாக காந்தியை அறிமுகப்படுத்தமுடியாது. காந்தி என்றாலே எளிமைதான், இல்லையா?175