SAVE 7%
Out of Stock

வல்லிசை / Vallisai

300 279

உலுக்குகிறது பறை இசை , விடுதலைக் களிப்போடு துள்ளிக் குதித்து குருதியில் ஒலி மதுவாய் பரவுகிறது . பறை வழியவிடும் இசைமதுவின் போதையில் நான் ஆடுகிறேன் . ஒரு கணம்தான் . அந்தத் துள்ளிசையின் வசீகரச் சுழலிலிருந்து தப்பித்துக்கொள்ள முயல்கிறேன் . எம் எம் மூதாதையரின் பறையொழிப்புப் போராட்ட நினைவுகள் என்னைச் சூழ்கின்றன . இப்போது பறையிசை என்னை சினம்கொள்ளச் செய்து மூளையைத் தெறிக்கவிடுகிறது . பறை தோற்கருவிகளின் பொதுப்பெயர் . ஆனால் , அது சிலர் மட்டுமே இசைத்திடும் கருவியாக எப்படிச் சாதியோடு பிணைக்கப்பட்டது ?
இசையில் சுதி வேறுபாடு இருக்கலாம் . சாதி வேறுபாடும் இருக்குமா ? பறையை சாதியோடு பிணைத்திருப்பது ஒரு சதி . இது அனைவரும் அறிந்தது . ஆனால் , விளக்கங்களைச் சொல்லிக் கொண்டிருப்பதற்கு இது நேரமில்லை . என் கையில் திணிக்கப்பட்ட பறையை நட்ட நடுவெளியில் வீசியெறிகிறேன் . அது சமமின்மையை உலுக்கும் வல்லிசையைக் காற்றில் பரவச்செய்யும் . நான் என்னிடமுள்ள தோற்கருவிகளை எரித்துக் குளிர்காய்ந்தபடி அதை உணர்ந்துகொண்டிருப்பேன் .
அழகிய பெரியவன்

Out of stock

Additional information

Weight 0.361 kg
AUTHOR NAME

BOOK FORMAT

Paper Back

ISBN

9789382648437

NO OF PAGES

320

PUBLISHED ON

2016

PUBLISHER NAME