SAVE 7%
Out of Stock

நாலுகெட்டு / Naalukettu

325 302

– எம்.டி. வாசுதேவன் நாயரின் ‘ நாலுகெட்டு ‘ நாவல் வெளியான அறுபதாம் ஆண்டு இது . எழுதப்பட்டு இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரும் வாசக ஏற்புக்கு உரியதாகவும் இலக்கிய விவாதங்களில் எடுத்துக் காட்டப்படும் முன்னுதாரணப் படைப்பாகவும் ஆய்வுக்குக் கொள்ளப்படும் இலக்கிய ஆவணமாகவும் திகழ்கிறது .
அப்புண்ணி என்ற மையப்பாத்திரத்தின் அக , புற சஞ்சாரங்கள்தாம் நாவலின் கதையோட்டம் . மருமக்கள்தாய முறையின் தூல வடிவமான நாலுகெட்டுத் தறவாட்டுக்குள் கூட்டுக் குடும்பத்துக்குள் – நிகழும் உறவு மோதல்களையும் அதிகாரச் சிக்கல்களையும் பின்புலமாகக் கொள்கிறது . அதன் விரிவாக நிலவுடைமைச் சமூகத்தின் வீழ்ச்சியையும் அடையாளம் காட்டுகிறது . இந்த இயல்புகளால் கேரளத்தின் ஒரு பகுதியின் வரலாறாகவும் ஒரு காலகட்டத்தின் ஆவணமாகவும் நிலைபெறுகிறது .
‘ நாலுகெட்டு ‘ சமகால மலையாள நாவல் கலையின் செவ்வியல் ஆக்கங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது . இதுவரை ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட பிரதிகள் விற்பனையானதுடன் பதினான்கு மொழிகளில் பெயர்க்கவும் பட்டுள்ளது .
மலையாளத்திலிருந்து தமிழில் குளச்சல் யூசுஃப்

Out of stock

Additional information

Weight 0.316 kg
AUTHOR NAME

BOOK FORMAT

Paper Back

ISBN

9789386820570

NO OF PAGES

279

PUBLISHED ON

2018

PUBLISHER NAME

TRANSLATOR

குளச்சல் யூசுப் / Colachel yoosuf