SAVE 7%
In Stock

ஜாதியற்றவளின் குரல் / Jaathiyatravalin Kural

450 419

ஜாதி ஒழிப்பு சார்ந்த கட்டுரைகளை நான் எழுதத் தொடங்கி 20 ஆண்டுகளாகின்றன . இந்நூலில் உள்ள கட்டுரைகள் 2001-2010 வரை எழுதப்பட்டவை . ஆனால் , அதன்பின்னர் நான் எழுதிய எல்லாமே திரும்பச் செய்தல்தான் ; நபர்களும் ஊர்களும் மட்டுமே மாறியிருக்கும் . ஆனால் , சாதி நிலையானதாக அப்படியே இருப்பதை சாதி ஒழிப்பிற்காகப் போராடிய , போராடும் பலரையும் போல நானும் வெறுப்போடு பார்க்கிறேன் . எந்த அரசியல் , சமூகப் போராட்டங்களாலும் சாதியை அசைத்துப் பார்க்க முடியவில்லை . பேரிடர் தாக்கினால் பேரிடரிலும் சாதிவெறி என எழுத நேர்ந்தது .
இதோ தற்போது கொரோனாவிற்காக ஊரடங்கு போடப்பட்டது . ஊரடங்கிலும் சாதிவெறி என எழுத நேர்ந்தது .
மீண்டும் மீண்டும் வன்கொடுமைகள் , தீண்டாமைகள் , புறக்கணிப்புகள் , அந்தத் துறையில் ஒடுக்குமுறை , இந்தத் துறையில் பாகுபாடு என எழுதிக் கொண்டே இருப்பதற்கு முடிவே வரவில்லை . ஓர் அநீதியை எதிர்த்துப் போராடுவது எதற்காக ? அந்த அநீதி ஒரு சில தலைமுறைகளிலாவது ஒழிக்கப்படும் என்ற நம்பிக்கையில்தான் . ஆனால் , சாதிக்கு மட்டும் அத்தகைய நிலையை நாம் ஏன் உருவாக்கவில்லை ? பிரச்சனைகளை பேசிக் கொண்டே இருப்பது தீர்விற்கு வழி வகுக்காது ; தீர்வைப் பற்றி பேசுவது மட்டுமே பிரச்சனையை ஒழிக்கும் என்பது அண்மையில்தான் எனக்கு விளங்கத் தொடங்கியிருக்கிறது . எனது அனுபவத்தில் விளைந்த மனப்பக்குவமாக இதை எடுத்துக் கொள்கிறேன் .

1 in stock

Additional information

Weight 0.544 kg
AUTHOR NAME

BOOK FORMAT

Paper Back

ISBN

97893990811076

LANGUAGE

NO OF PAGES

400

PUBLISHED ON

2021

PUBLISHER NAME