SAVE 7%
In Stock

கௌரவன் / Kauravan

499 464

நாமறிந்த மகாபாரதம் , குருச்சேத்திரப் போரில் வெற்றியடைந்த பாண்டவர்களின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட ஒரு கதை . எல்லா வழிகளிலும் நயவஞ்சகமாகத் தோற்கடிக்கப்பட்டிருந்த தங்கள் பக்கக் கதையை எடுத்துரைக்க வருகிறான் ‘ கௌரவன் ‘ துரியோதனன் .
பரதகண்டத்தின் சக்திமிக்கப் பேரரசு ஒன்றில் ஒரு ராஜகுழப்பம் தலைதூக்கிக் கொண்டிருக்கிறது . குரு வம்சத்தின் ஆட்சிப் பொறுப்பாளரான பீஷ்மர் , தன் அரசின் ஒற்றுமையைக் காக்கப் போராடிக் கொண்டிருக்கிறார் . பார்வையற்ற திருதராஷ்டிரன் , அந்நிய நாட்டைச் சேர்ந்த தன் மனைவி காந்தாரியுடன் அரச பீடத்தில் அமர்ந்திருக்கிறான் . இறந்துவிட்ட அவனுடைய தம்பி பாண்டுவின் மனைவியான குந்தி , தன் மூத்த மகன் தர்மனை அரியணையில் அமர்த்தத் துடித்துக் கொண்டிருக்கிறாள் .
இது ஒரு புறம் இருக்க –
தென்னக ராஜ்யங்களின் கூட்டமைப்பின் ராஜகுருவான பரசுராமன் , குரு வம்சத்தை வீழ்த்தி ஒட்டுமொத்த பரதகண்டத்தையும் தன் அதிகாரத்தின் கீழ் கொண்டுவருவதற்குத் தக்க சமயத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறான் .
மிகத் தாழ்ந்த சாதியைச் சேர்ந்த ஏகலைவன் , சமுதாயத்தில் புரையோடியிருக்கும் சாதி அமைப்பை மீறி ஒரு போர் வீரனாக ஆகக் கனவு கண்டு கொண்டிருக்கிறான் ,
நாகர்களின் தீவிரவாதத் தலைவனான தட்சகன் , கீழ்ச்சாதியினரையும் தீண்டத்தகாதவர்களையும் தன்னுடன் கூட்டுச் சேர்த்துக் கொண்டு , ஒரு புரட்சியைத் தூண்டத் தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறான் .
சாதிப் பிரிவினை நம் சமுதாயத்திற்கு இன்றியமையாதது , அந்தக் கட்டமைப்புச் சீர்குலையும்போது , ஒட்டுமொத்தச் சமுதாயமும் சீரழிந்துவிடும் என்று வலியுறுத்தி , அதற்குப் புனித நூல்களை மேற்கோள் காட்டும் தெளமியன் போன்ற பிராமணர்கள் தங்களை அரசர்களின் ஆலோசகர்களாக நிலைப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்
இக்குழப்பங்களுக்கு நடுவே ஒரே ஒருவன் மட்டும் உறுதியுடன் நெடிதுயர்ந்து நிற்கிறான் , தன் மனசாட்சிப்படி நடக்க முயலும் பட்டத்து இளவரசனான துரியோதனன் தான் அவன் . தனக்கு நியாயப்படி கிடைக்க வேண்டிய அரியணைக்காகத் ஒன்றுவிட்டச் சகோதரர்களுடன் போராட வேண்டிய இக்கட்டான நிலைக்குத் தள்ளப்படுகின்ற அவன் , அதர்மங்கள் , அநீதிகள் , சூழ்ச்சிகள் , சதிகள் ஆகியவற்றை அடுக்கடுக்காகச் சந்திக்க நேர்கிறது ,
அதே அஸ்தினாபுர அரண்மனைத் தாழ்வாரங்களில் , பரதகண்டத்தை முற்றிலுமாக அழித்தொழிக்கும் நோக்கத்துடன் வலம் வந்து கொண்டிருக்கிறான் ஓர் அந்நிய நாட்டு இளவரசன் . அவன் உருட்டிய பகடைகள் ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தின் ஆணிவேரையே ஆட்டம் காணச் செய்து கொண்டிருக்கின்றன …

1 in stock

Additional information

AUTHOR NAME

BOOK FORMAT

Paper Back

ISBN

9788183224857

NO OF PAGES

626

PUBLISHED ON

2014

PUBLISHER NAME

TRANSLATOR

நாகலட்சுமி சண்முகம்