கானகத்தின் குரல் ஒருவிதத்தில் மண்ணுலகில் பெருகிப்போன தன்னலக் குரலின் எதிரொலி . நாயின் வாழ்க்கை வரலாறாக இல்லாமல் மானுட வாழ்வின் விமர்சனமாக நாவல் உருமாறும் முக்கியமான தளம் இது . வாசக மனத்தில் எண்ணற்ற கேள்விகளை உருவாக்குவதில் ஜாக் லண்டன் பெற்றிருக்கும் கலைவெற்றி மகத்தானது .
ஜாக் லண்டனின் The Call of the Wild நாவல் 1958 ல் பெ.தூரன் மொழியாக்கத்தில் கானகத்தின் குரல் என்ற பெயரில் வெளியானது .
பக் என்ற நாயின் வரலாற்றை விவரிக்கும் சுவாரஸ்யமான புத்தகம் . அலாஸ்காவில் தங்க வேட்டைக்குப் போனவர்களின் கதையைச் சொல்வதுடன் பனிச்சறுக்கு வண்டி இழுத்துச் செல்லும் நாயின் கதையினை அழகாக விவரித்திருக்கிறார் ஜாக் லண்டன் . இந்த நாவல் நான்கு முறை ஹாலிவுட்டில் படமாக்கபட்டிருக்கிறது .
ரஷ்ய மக்களால் விருப்பமுடன் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு சில அமெரிக்கப் படைப்பாளர்களில் ஜாக் லண்டன் முக்கியமானவர் .