SAVE 7%
Out of Stock

இரண்டாம் இடம் / Irandam Idam

190 177

‘ ஞானபீடம் ‘ விருது பெற்ற ‘ இரண்டாம் இடம் ‘ என்னும் இந்த மலையாள நாவல் ‘ கங்குலுயின் பாரதம் ‘ மற்றும் ‘ ஜெயம் ‘ என்னும் நூலில் கூறப்படும் மகாபாரதக் கதையை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டதாகும் . அபரிமித கற்பனையையும் , மர்மங்களையும் உட்படுத்தாமல் மனிதனால் என்ன செய்ய முடியுமோ அதை மட்டும் வைத்து , மனித குண இயல்புகளைக் கொண்ட கதாபாத்திரங்களைப் படைத்து , பீமனின் பார்வையில் , பீமனே சொல்வது போல் , வடிவமைக்கப்பட்டதே இந்நாவலின் சிறப்புத் தன்மையாகும் . இதுவரையில் படித்துள்ள மகாபாரதக் கதைகளிலிருந்து மாறுபட்டு சற்று வேறுபாடுள்ள பாரதக் கதையை இந்நாவலில் காணலாம் .
மலையாள மொழியின் மிகச் சிறந்த படைப்பாளிகளில் ஒருவரான எம்.டி. வாசுதேவன் நாயர் இதன் ஆசிரியர் . சாகித்திய அகாதெமி விருது , கேரள சாகித்திய அகாதெமி விருது , ஞானபீட விருது எனப் பல விருதுகளைப் பெற்றவர் . மலையாள வார இதழான ‘ மாத்ருபூமி’யின் ஆசிரியராகப் பல ஆண்டுகள் பணியாற்றியவர் . தற்போது கேரள சாகித்திய அகாதெமியின் தலைவராக இருந்து வருகிறார் . ‘ காலம் ‘ , நாலு கட்டு ‘ , ‘ அகர வித்து ‘ போன்ற சிறந்த நாவல்களைப் படைத்தவர் . பெருந்தச்சன் ‘ , ‘ ஒரு வடக்கன் வீர சுதா ‘ போன்ற திரைப்படங்களுக்குத் திரைக்கதை அமைத்து இயக்கியவர் .
குறிஞ்சிவேலன் சுமார் 35 ஆண்டுகளாக மொழிபெயர்ப்புப் பணிச் செய்து வருகிறார் . 20 நூல்களுக்கு மேல் மலையாள மொழியிலிருந்து தமிழாக்கம் செய்துள்ளார் . எஸ்.கே. பொற்றெக்காட்டின் ‘ விஷ கன்னி ‘ என்னும் நாவலை மொழியாக்கம் செய்தமைக்காக 1994 – ம் ஆண்டில் மொழியாக்கத்திற்கான சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் . பல இலக்கிய அமைப்புக்களின் பாராட்டுக்களையும் , விருதுகளையும் பெற்றவர் .

Out of stock

Category:

Additional information

Weight 0.569 kg
AUTHOR NAME

BOOK FORMAT

Paper Back

ISBN

9788126008933

NO OF PAGES

464

PUBLISHED ON

2000

PUBLISHER NAME

TRANSLATOR

குறிஞ்சிவேலன் / Kurunjivelan