SAVE 7%
Out of Stock

இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள் / Intha Kulathil Kalerinthavargal

200 186

சலனங்கள் மறைவதில்லை . தன்னை உருவாக்கிய , உயர்த்திய , பாதித்த , பரவசப்படுத்திய மனிதர்களை , ஈரம் காயாத வார்த்தைகளால் இந்தப் புத்தகத்தில் பதிவு செய்கிறார் வைரமுத்து .
கலைஞரும் எம்.ஜி.ஆரும் ; சிவாஜியும் கண்ணதாசனும் ; பாரதிராஜாவும் இளையராஜாவும் ; ஜேசுதாசும் சுசீலாவும் இன்னும் பலரும் வைரமுத்து மூலமாக மறு அறிமுகம் ஆகும் போது , நாம் அடையும் பிரமிப்பு விவரிக்கமுடியாதது . பெரிய மனிதர்கள் , சிறிய மனிதர்கள் என்ற பாகுபாடில்லாமல் வைரமுத்துவின் பறவை மனம் இறக்கை கொள்கிறது .
வைரமுத்து தன் உலகோடு கொண்டிருக்கும் உறவு நுட்ப மானது ; ஆழமானது ; உணர்ச்சிபூர்வமானது . அந்த உறவின் வலிமையை , ஆனந்தத்தை , அர்த்தத்தை , பரவசத்தை , பூரிப்பை , வலியை , வேதனையை , வைரமுத்து நேர்மையோடு நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் .
நெகிழ்ச்சியும் கோபமும் அடுத்தடுத்து அணிவகுக்கும் அபூர்வப் புதையல் இது .

Out of stock

Category:

Additional information

Weight 0.280 kg
AUTHOR NAME

BOOK FORMAT

Paper Back

LANGUAGE

NO OF PAGES

248

PUBLISHED ON

1991

PUBLISHER NAME