SAVE 7%
Out of Stock

வெள்ளரிப்பெண் / Vellarippenn

500 465

விலங்காதல் என்ற எல்லையில் இந்தக் கதைகளின் கலை உருவாகியிருக்கிறது . விலங்கு என்ற எல்லை வகுத்தல் மனித களத்திலிருந்து உருவாவதாகவே கொள்ளமுடியும் . அந்த எல்லையைத் தாண்டி இந்தக் கதைகள் பயணிக்கின்றன . விலங்குகளின் புலன்சார் கூர்மையை மனித புலன் உலகத்துக்கு அப்பால் வைக்காமல் கலைக்குள் உள்வாங்கும் படைப்பாக்கம் இந்தக் கதைகளில் சாத்தியமாகி , உயிரினங்களின் உறவும் உயிரற்றவைகளின் உறவும் இணைந்த பிறழ்வின் நேரடி காட்சிகளாக இந்தக் கதைகள் உள்ளன . விலங்காகி விலங்குகளின் மொழியை உற்பத்தி செய்யும் கதைகளாக இவை மாறியுள்ளன . அல்லது விலங்காக உருமாறியுள்ளன . ப்ரான்ஸ் காப்காவின் கிரிகோர் சாம்சா கரப்பான் பூச்சியாக உருமாறிய கதை நிகழ்வுக்குப் பின் உருமாறுதல் எழுத்தில் விலங்கியல் தத்துவப் புனைவுகளுக்கான முன்மாதிரி கட்டமைக்கப்பட்டது . மனிதனாதல் என்பதை விலங்கின் தனத்திலிருந்து எழுதப்படவேண்டியதாக அதன் பின்னான தத்துவங்கள் வலியுறுத்தின . அந்த எழுத்தின் வரிசையைப் பின்பற்றி வந்த கதைகளாக , கோணங்கியின் கதைகளைக் குறிப்பிடலாம் .
முயின் சாதிகா

Out of stock

Category:

Additional information

Weight 0.442 kg
AUTHOR NAME

BOOK FORMAT

Paper Back

ISBN

978819078792500001

NO OF PAGES

576

PUBLISHED ON

2016

PUBLISHER NAME