பெண் , ஆண் என்ற இரண்டு வெவ்வேறு சிந்தனை உயிரிகள் அல்லது பண்பாட்டு உயிரிகள் இணையும் நீரோட்டத்தில் ஏற்படும் சவால்களை , முரண்களை எதிர்கொண்டு வெல்லும் வழிகளை இந்தக் கதைகள் வழியாக நான் கண்டடைந்தேன் . குறிப்பாக , ‘ விரல்கள் ‘ , மற்றும் ‘ அழகின் ஒரு பகுதி ’ , கதைகள் . பெண்ணும் ஆணும் ஒருவரையொருவர் நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கும் இலட்சோப இலட்ச ஆண்டுகளில் இருவரும் ஒருவரையொருவர் எதிரிகளாய்ப் பார்க்கக் கற்றுக்கொண்டதைக் காதல் வழியாகவே வெல்லமுடிந்திருக்கிறது . என்றாலும் , காதலில் புதைந்து கிடக்கும் முட்டாள்தனம் மானுட ரகசியங்களின் பொருள் விளங்கிக் கொள்ளும் தம் முயற்சிகளைக் கைவிட்டது போல் தோன்ற காதலை எப்படியெல்லாம் தன் வாழ்க்கையின் அறைகளுக்குள் நகர்த்திச் செல்லமுடியும் என்பதன் பயணம்தான் இத்தொகுப்பு .