லியோ டால்ஸ்டாய் என்று அழைக்கப்படும் இவர் 1828 இல் பிறந்தார் .
டால்ஸ்டாய் செல்வக் குடியிலே பிறந்திருந்தாலும் அவருடைய வாழ்க்கை ஒரு சோகக்கதையாகவே இருந்தது . டால்ஸ்டாய் படிப்பில் சூட்டிகையானவராக இருக்கவில்லை .
ஆனால் இவருக்கு தனது தாய் மொழியான ருஷ்ய மொழி தவிர பிரெஞ்சு , ஆங்கிலம் , ஜெர்மன் , போலீஷ் , செக் , பல்கேரியா , டாடார் . இத்தாலி , அராபி , டச்சு , இலத்தீன் , கிரேக் , ஹெப்ரியூ இந்த மொழிகளிலும் நல்ல தேர்ச்சி இருந்தது . அதனால் இம்மொழிகளிலுள்ள எழுத்தாளர்களின் படைப்புகளை யெல்லாம் வாசிக்கும் பேறு பெற்றார் . அவற்றை ஆராயவும் செய்தார் .
தான் கற்றறிந்த , கேட்டறிந்த வாழ்க்கை நெறிகளை வாழ்க்கையில் பின்பற்றவும் முயன்றார் . ஆனால் அவர் வாழ்க்கை முள் பாதையாகத்தானிருந்தது . ஆனாலும் அவர் அஹிம்சா நெறியைக் கடைப்பிடித்தார் .
டால்ஸ்டாய் மேலை நாட்டில் தோன்றிய மிகத் தெளிவான சிந்தனையாளர்களில் ஒருவர் . ஒப்பற்ற நூலாசிரியர்களில் இவரும் ஒருவர் என்று இவரைப்பற்றி வர்ணிக்கிறார் காந்தியடிகள் .
‘ உனக்குத் தீமையைச் செய்தவருக்கும் நன்மையே செய் ‘ என்றார் புத்தர் .
இவர்களின் கருத்துக்களைத்தான் டால்ஸ்டாயும் தன் கதைகளில் வலியுறுத்தியுள்ளார் .
உலகின் தலை சிறந்த எழுத்தாளர்களில் ஒருவராகப் போற்றப்படும் டால்ஸ்டாய் தன் வாழ்நாளின் பெரும் பகுதியை , ஐம்பது வருடங்களை இலக்கியப் பணிக்கென்றே அர்ப்பணித்தார் . கதைகள் , குட்டிக்கதைகள் , புதினம் , நாடகம் , கட்டுரை என்று இவர் தடம் பதிக்காத துறையே இல்லை .
அவருடைய நீதிக்கதைகளில் சில இப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன . சிறுவர் முதல் பெரியவர் வரை படித்து மகிழத்தக்க அருமையான பொக்கிஷம் அவரது கதைகள் என்றால் மிகையாகாது , நீங்களும் இவற்றைப் படியுங்கள் . மகிழுங்கள் .