மோடி அரசாங்கம் வகுப்புவாதத்தின் புதிய அலை / Modi Arasangam: Vakuppuvathathin Puthya Alai
₹160₹149
” தீயவை வெற்றி பெற வேண்டுமெனில் , நல்லவை மவுனமாக இருந்திட வேண்டும் . நல்லவர்கள் மவுனமாக இருக்க அனுமதிக்கக்கூடாது என்பதற்காகத்தான் இந்நூல் பணிவுடன் சமர்ப்பிக்கப்படுகிறது ” என்று கூறும் சீத்தாராம் யெச்சூரி , இன்றைக்கு உழைக்கும் மக்கள் முன்னே வலுவுடன் நிற்கும் பேரபாயமான வகுப்புவாதம் குறித்து , அதன் தோற்றம் , அதன் உண்மையான நோக்கம் , அது பயன்படுத்தும் முகமூடிகள் , அதன் சாதிய அடிப்படை , அது இந்திய ஃபாசிசமாக உருவெடுத்து வரும் விதம் ஆகிய எல்லாம் குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு .
இந்திய ஃபாசிசத்தின் முன்வடிவான ‘ இந்துத்வா ‘ , மதச்சிறுபான்மையினருக்கு எதிரானது என்ற தோற்றத்தில் கட்டப்பட்டாலும் அவர்களது உண்மையான எதிரிகள் இஸ்லாமியரோ கிருஸ்துவரோ அல்ல ; இருக்கின்ற ஏற்றத்தாழ்வான வர்க்க , சாதிய அமைப்பை மாற்ற முனையும் அனைவரும்தான் . பெரும்பாதிப்பிற்கு ஆளாகப்போவது உழைக்கும் வர்க்கமாகவும் சாதியில் பிற்படுத்தப்பட்ட தலித் சாதிகளைச் சேர்ந்தவர்களாகவும் இருப்போர்தான் என தோலுரித்துக் காட்டும் கட்டுரைகள் .
‘ இந்துத்வா ‘ வின் நடைமுறைத் தந்திரங்களை எளிதில் விளங்கிக் கொள்ளும் வகையில் தன் ஆற்றொழுக்கு நடையில் விவரிக்கின்றார் தோழர் யெச்சூரி . இதை நேரடியாக தமிழில் எழுதியதோ என தோன்றும் விதமாக சரளமாக மொழிபெயர்த்துள்ளார் ச.வீரமணி .