SAVE 7%
In Stock

மாக்பெத் / Macbeth

350 326

ஆழ்ந்த ஆங்கில மொழி அறிவும் , ஷேக்ஸ்பியரைப் பல காலம் பரிவோடு பயின்ற புலமையும் , இதற்கு முன்பே ஹாம்லெட் , லியர் அரசன் என்ற இரு நாடகங்களைத் தமிழிலே ஆக்கித் தந்ததால் மெருகேறிய திறனும் , தமிழை இயல்பாக , லாவகமாக , உணர்ச்சித் துடிப்போடு கையாளும் பாங்கும் மகராஜன் அவர்களுடைய கருவிகள் . இவற்றை ஆட்சியோடு கையாளுவதால் , மாக்பெத் என்ற இந்த நாடக மொழிபெயர்ப்பின் மூலமாக , ஷேக்ஸ்பியரின் இதயத்தை அவரால் தொட முடிகிறது .
ஷேக்ஸ்பியரை நேரிற்பயிலும் போது ஏற்படும் ஐயங்கள் , இடர்பாடுகள் , இவை ஏதுமின்றி தெளிந்த இன்றைய தமிழில் மகராஜன் தருகிறார் . அவருடைய உதவியால் பழங்காலத்து ஸ்காட்லாண்டுக்குப் போகிறோம் ; அங்கே உயிர்பெற்றுக் கண்முன்னே உலாவும் பாத்திரங்களோடு ஒட்டுகிறோம் ; மனித உள்ளத்தின் விதவிதமான கதிகளை நாமே பயில்கிறோம் ; அதன் பெருமையை , அதன் சிறுமையைக் காண்கிறோம் . பிறகு பக்குவம் பெற்ற மனதோடு தினசரி வாழ்க்கைக்குத் திரும்புகிறோம் . இத்தனைக்கும் துணை செய்யும் உலக மகாகவி ஒருவனோடு , கரவின்றி உறவாடும் கவிதைப் பயனைப் பெறுகிறோம் . இதைச் சாத்தியமாக்கிய அறிஞர் மகராஜன் நமது நன்றிக்கும் பாராட்டுக்கும் உரியவர் .
பேராசிரியர் அ . சீநிவாசராகவன்

1 in stock

Category:

Additional information

Weight 0.216 kg
AUTHOR NAME

BOOK FORMAT

Paper Back

ISBN

9789388860901

NO OF PAGES

253

PUBLISHED ON

2020

PUBLISHER NAME

TRANSLATOR

நீதிபதி.Dr.எஸ்.மகராஜன் / Dr.Justice.S.Maharajan