SAVE 7%
Out of Stock

பெருந்தலைவர் காமராஜர் / Perunthalaivar Kamarajar

210 195

கடின உழைப்பையும் , உறுதியையும் தன்னகத்தே கொண்டவர் காமராஜர் . அவரின் பிறப்பு முதல் இறப்பு வரை நடைபெற்ற சம்பவங்கள் இடம்பெற்றுள்ள இந்நூலில் , சுமார் 200 – க்கும் அதிகமான அரிய புகைப்படங்களும் இடம்பெற்று இருப்பது நூலின் சிறப்பு அம்சம் . காமராஜர் தன் பள்ளிப்பருவத்திலே , எல்லாருக்கும் எல்லாம் சமமாகக் கிடைக்க வேண்டும் என்ற சிந்தனையை ஏற்படுத்தினார் என்பதை , பள்ளியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் , ஆசிரியர் பிரசாதம் சமமாக வழங்காததைத் தன் பாட்டியிடம் கூறி ஆதங்கப்பட்டதன் மூலம் காணச் செய்துள்ளார் நூலாசிரியர் .
சத்தியமூர்த்தியைத் தன் அரசியல் குருவாக ஏற்றுக்கொண்ட காமராஜர் , கட்சி மற்றும் போராட்டங்களில் , தனது குருவுடன் ஒத்த சிந்தனையுடனே செயல்பட்டார் என்பதையும் , முதல்வரான பின் துணிச்சலும் , தைரியமும் நிறைந்து செயல்பட்டார் என்பதும் , அவர் ஏற்படுத்திய கல்விப் புரட்சி , தொழில் புரட்சி , விவசாயப் புரட்சி , மின்சாரப் புரட்சி , நிலச்சீர்திருத்தம் ஆகிய குறித்து தெளிவாகவும் , எளிமையாகவும் எடுத்துரைத்துள்ளார் . இந்நூலைப் படித்தபோது , காமராஜருடன் பள்ளிப்பருவம் முதல் இறுதி வரை , அவருடன் ஒன்றி வாழ்ந்தது போன்ற ஓர் எண்ணத்தை ஏற்படுத்துகிறது .
– தினமணி
தமிழ்நாட்டு மக்களின் இதயத்தில் நீங்காத இடத்தையும் , தமிழக வரலாற்றில் மங்காத புகழையும் , பெற்றவர் , பெருந்தலைவர் காமராஜர் . வாழ்க்கை பின்னணி எதுவும் இல்லாமல் நேர்மையையும் , உழைப்பையும் ஏந்தி இந்திய அரசியலில் தனிச் சிறப்பைப் பெற்றவர் .
கிராமம்தோறும் கல்விக்கூடங்கள் . அதில் மதிய உணவுத் திட்டம் தொடங்கி கல்விக் கண் கொடுத்த கர்ம வீரர் காமராஜர் . அணைகள் பல அமைத்தவர் ; தமிழ்நாட்டில் தொழில் புரட்சிக்கு வித்திட்டவர் ; இரு முறை புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை ஏற்று திறம்பட முடித்து ‘ கிங் மேக்கர் ‘ என்று புகழப்பட்டார் . எல்லாவற்றுக்கும் மேலாக அப்பழுக்கற்ற அரசியல்வாதியாகத் திகழ்ந்தார் .
அவரைப் பற்றி ஏராளமான புத்தகங்கள் வெளி வந்துள்ளபோதிலும் , எஸ்.கே.முருகன் எழுதியுள்ள இந்த நூல் எளிமையான நடையில் , அனைவரும் படிக்கும் வகையில் இருப்பது அருமை .
– தினத்தந்தி

Out of stock

Category:

Additional information

Weight 0.342 kg
AUTHOR NAME

BOOK FORMAT

Paper Back

ISBN

9788184763652

LANGUAGE

NO OF PAGES

304

PUBLISHED ON

2011

PUBLISHER NAME