SAVE 7%
In Stock

பின்கட்டு / Pinkattu

90 84

தமிழ்ப் பத்திரிகைகளின் தரம் அல்லது தரமின்மை என்ற பாதிப்புக்கு உள்ளாகாமல் எழுதப்பட்ட கதைகள் இவை … இக்கதைகளைப் பிரசுரிக்கிற திராணி உள்ள தமிழ்ப் பத்திரிகை எதுவும் இன்றையச் சூழ்நிலையில் இருப்பதாகப்படவில்லை . பத்திரிகைகளின் பந்த நிர்பந்தங்களை மீறியும் , இலக்கிய பூர்வமாகவும் சிந்திக்கிற நான்கு பேர் தாங்களாகவே வெளியிட்டிருக்கிற சிறுகதைத் தொகுப்பு இது . தப்பித்தவறி ஒன்றிரண்டு பிரசுரிக்கப்படுகிற வாய்ப்பு உண்டு என்று யாரேனும் சொல்வீர்களேயானால் , அது பத்திரிகை ஆசிரியர்களும் சமயங்களில் அவர்கள் அகராதிப்படி நிதானம் இழக்கக்கூடும் என்பதைத்தான் நிரூபிக்குமே அன்றி அவர்களின் இலக்கியப் பிரக்ஞையை நிரூபிக்காது …
மனித சமூகத்தில் அநேகம் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பினும் வாழ்வின் அடிப்படை குணாதிசயங்கள் , மதிப்பீடுகள் , அவ்வளவாக மாறவில்லை என்றே சொல்ல வேண்டும் .
இக்குணாதிசயங்களை , மதிப்பீடுகளைப் புரிந்துகொள்கிற கலைஞன் , வாழ்வின் சாராம்சத்தைப் புரிந்துகொண்டவன் ஆகிறான் . அவனது சிருஷ்டிகள் உயிர்த்துடிப்பும் , அர்த்த புஷ்டியும் நிரம்பப்பெறுகின்றன . அவை சமகாலத்திற்கு மட்டுமல்லாமல் மனித பரம்பரைக்கே உரியனவாய் ஸ்தாபிதம் பெறுகின்றன .
ஐராவதம் ஆர்.சுவாமிநாதன்
‘ கோணல்கள் ’ தொகுப்பின்
முன்னுரையில் ( 1968 )

1 in stock

Category:

Additional information

Weight 0.075 kg
AUTHOR NAME

BOOK FORMAT

Paper Back

ISBN

9789382394570

LANGUAGE

NO OF PAGES

69

PUBLISHED ON

2021

PUBLISHER NAME