SAVE 7%
In Stock

பார்த்தீனியம் / Partheeniyam

450 419

அண்மைக்காலத்து வரலாற்றில் இலங்கையில் இன்னொரு அரசின் துணையுடன் நிகழ்ந்துள்ள தமிழின அழித்தொழிப்பு நிகழ்வுகளை உலகம் பார்த்துக்கொண்டுதான் இருந்தது . யுத்தத்தின் கரும்புகை ஈழத்து வானத்தில் இன்னும் படிந்தே கிடக்கிறது . அறம் ஒழித்த மனங்களின் கண்டுபிடிப்பே யுத்தம் . யுத்தம் காதல் வாழ்வை சமூக வாழ்வை அன்பை குடும்ப உறவுகளை சிதைக்கிறது . மொத்தமாக மானுட மேன்மையை யுத்தம் கொல்கிறது . தமிழ்நதியின் இந்தப் பார்த்தீனியம் இந்த உண்மைகளைத்தான் மனம் கசியும் விதமாக ஆற்றல் வாய்ந்த ஆனால் எளிய மொழியில் சொல் கிறது . காதலை , நட்பை , உயிர் கலந்த உறவுகளை , சமூக நேசத் தையும் சீரழித்த , கடந்த முப்பது ஆண்டுக்கால ஈழத் தமிழ்வாழ்வைத் துல்லியமாகச் சித்தரித்துக் கண்முன்னும் நம் மனசாட்சி முன்பும் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார் தமிழ்நதி . உலகத்தின் யுத்தகாலக் கலைப் படைப்புகளில் இந்தப் பார்த்தீனியம் குறிப்பிடத்தகுந்த படைப்பாகப் பல காலம் பேசப்படும் . –
பிரபஞ்சன்

1 in stock

Category:

Additional information

Weight 0.553 kg
AUTHOR NAME

BOOK FORMAT

Paper Back

ISBN

9789382648352

NO OF PAGES

512

PUBLISHED ON

2016

PUBLISHER NAME