SAVE 7%
In Stock

நிலம் / Nilam

150 140

தமிழில் இன்று இயங்கிவரும் எந்த எழுத்தாளனும் அறியாத விளிம்புநிலை மனிதர்களின் பிரதேசங்களை அறிந்திருப்பவர் பவாசெல்லதுரை மட்டுந்தான் . பொதுப் பார்வையின் வெளிச்சத்தில் படாத வேட்டைக்கார நரிக்குறவர்களையும் , இனத் தொழிலாக களவைக் கைக்கொண்டிருக்கும் உப்புக்குறவர்களையும் , எலி , பாம்புகளை வேட்டையாடிக் கொண்டு , உபதொழிலாக வீடுபுகுந்து திருடும் இருளர்களையும் , கிணறு வெட்ட குழுவாக வரும் ஒட்டர்களையும் இவர் கதைகளைத் தவிர வேறெங்கும் காணமுடியாது .
இவரின் கதையுலகில் நுழைந்துவிட்டால் எதிர்ப்படும் விநோதங்கள் எல்லாமே அபூர்வமானவை . மல்லாட்டையை உரித்தால் வெளியே வரும் ரோஸ்நிற தேவதைகளும் , மரங்களில் கொத்துக்கொத்தாகப் பூத்திருக்கும் சி றுவர்களும் , கிணறு வெட்டும்போது புதுத்தண்ணி மண்ணைப் பிளந்து கொண்டு பீறிடும்போது வளையல்களைக் கழற்றி அந்தக் கிணற்றுக்குள் எறிபவளும் , அப்பா அடிப்பதற்கு உயர்த்திய கையைப் பிடித்து முறுக்கியவனும் மறக்க முடியாத நுட்பமான வாசி ப்பனுபவத்தை வாசகர்களுக்கு அளிப்பவர்கள் .
ஜி.குப்புசாமி

1 in stock

Category:

Additional information

WEIGHT

0.229

AUTHOR NAME

BOOK FORMAT

Paper Back

ISBN

9789380545899

NO OF PAGES

184

PUBLISHED ON

2014

PUBLISHER NAME