ஆகப்பெரிய வாழ்க்கைக்கு முயலாதவர்களை வாழத் தகுதியற்றவர்களென ஒதுக்க முயல்கிறது சமூகம் . அத்தகையவர்களுக்கு மதத்தின் கோட்பாடுகளை உயிர் மூச்சாக்கிக் கொடுத்து மெல்லமெல்ல அவர்தம் உழைப்பையும் ரத்தத்தையும் தமக்கென ஆக்கிக் கொள்கிறவர்களைக் கண்சிவக்க நோக்குகிறார் தோப்பில் . மடித்துப் போடப்பட்டிருக்கிற வாழ்க்கையை நிமிர்த்துவதற்குள் தாம் எவற்றையெல்லாம் இழக்கிறோமென அறிந்துகொள்ள விரும்பாத மனிதர்களிடமிருந்தே சமூகத்திற்கான ஊட்டச் சத்து கிடைக்கின்றது .