இலங்கைத் திருகோணமலையில் பிறந்திருந்தாலும் தமிழக எழுத்தாளராகவே வாழ்ந்து எழுதி மறைந்தவர் பிரமிள் , அவரது வாழ்விலும் படைப்பிலும் ‘ நாஸ்டால்ஜியா ‘ வெளிப்பட்டது இல்லை . என்றாலும் அவரது கவிதைகளிலும் கதைகளிலும் கட்டுரைகளிலும் இலங்கை பற்றிய விசாரம் , பெருமளவுக்கு இருந்தே வந்துள்ளது . இத்தொகுப்பில் , பிரமிளின் மொத்த எழுத்துக்களில் இருந்து இலங்கை சம்பந்தப்பட்ட படைப்புகள் மட்டும் ஆய்வுப் பார்வையுடன் தேர்ந்தெடுத்துத் தொகுத்துத் தரப்பட்டுள்ளன .
இந்தியத் தமிழ் மண்ணிற்கும் ஈழத்திற்கும் இடையிலான வெளியில் அலைந்துகொண்டிருந்தவர் பிரமிள் . ‘ தானற்ற வெறுமையையும் துயிலற்ற மௌனத்தையும் ‘ என்றும் வேண்டி நின்ற ஒரு முழுமையான இந்திய மனநிலையில் , தான் சார்ந்த நிலத்தின் அவலத்தை அவதானிப்பதாக அமைகின்றன பிரமிளின் இந்தப் படைப்புகள் .