SAVE 7%
In Stock

சாதியை அழித்தொழித்தல் /Caatiyai azhittozittal

440 409

பி.ஆர் . அம்பேத்கரின் ‘ சாதியை அழித்தொழித்தல் ‘ மிக முக்கியமான ஆனால் அலட்சியப்படுத்தப்பட்ட இந்திய அரசியல் எழுத்துக்களுள் ஒன்று . 1936 இல் எழுதப்பட்ட இந்நூல் மிகத் துணிச்சலாக இந்து மதத்தையும் அதன் சாதீய அமைப்பையும் நிராகரிக்கிறது . W.E.B. டுபாய்ஸ் போன்ற ஆளுமையான அம்பேத்கர் , இறுகிய , கீழ்மேல் தன்மையில் , சமநீதியற்ற சமூகக் கட்டமைப்பை விதிக்கின்ற இந்து சமய நூல்களை மேதமையோடு இதில் விமர்சிக்கிறார் . உலகின் அதிகம் அறியப்பட்ட இந்துவான மகாத்மா காந்தி அம்பேத்கரின் கேள்விக்கணைகளுக்கு எதிர்வினையாற்றினார் . அந்த மோதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை .
விரிவான ஆய்வுக் குறிப்புகளுடன் வெளிவரும் ‘ சாதியை அழித்தொழித்தல் இன் இப்பதிப்பை ‘ டாக்டரும் புனிதரும் ‘ என்ற முன்னுரையின் வழி அறிமுகம் செய்யும் அருந்ததி ராய் , நவீன இந்தியாவில் இன்னும் எவ்வாறு சாதி துலங்கிக்கொண்டிருக்கிறது என்பதையும் அம்பேத்கருக்கும் காந்திக்குமான முரண்கள் அடங்கா அதிர்வுகளாக முழங்கிக் கொண்டிருக்கின்றன என்பதையும் விளக்குகிறார் . இனம் , சாதி , ஏகாதிபத்தியம் பற்றிய பார்வைகளை காந்தி உருவாக்கிக்கொண்ட அவரது ஆரம்பகால அரசியல் தளமான தென்னாப்பிரிக்காவுக்கு ராய் நம்மை அழைத்துச் செல்கிறார் . அம்பேத்கரின் வருகையை தேசிய இயக்கத்தின் முக்கிய நிகழ்வாகப் பதிவிடுவதோடு எவ்வாறு அவரது மேதமையும் கூர்மதியும் விடுதலைப் போராட்டத்தைப் பீடித்திருந்த பிளவுகளையும் சீர்திருத்த மறுப்பு மூர்க்கத்தையும் வெளிச்சமிட்டு காட்டுகிறது என்பதையும் விவரிக்கிறார் . அம்பேத்கரின் சாதியில்லாத உலக உயர் கருத்தாக்கத்துக்கு ராய் புத்துயிர் பாய்ச்சுவதோடு தலித் புரட்சி நிகழ்ந்தாலொழிய இந்தியா சமத்துவமற்ற அமைப்பாக நொண்டிநடையிலேயே இயங்கிக்கொண்டிருக்கும் என்றும் அறிவிக்கிறார்.

1 in stock

Additional information

Weight 0.508 kg
AUTHOR NAME

BOOK FORMAT

Paper Back

ISBN

9789352440245

LANGUAGE

NO OF PAGES

391

PUBLISHED ON

2016

PUBLISHER NAME