நான் 1938 இல் இரண்டு மாதங்கள் சேலத்தில் ஒரு ஹோட்டலில் போய் உட்கார்ந்துகொண்டு ஒரு நாவலை எழுதி முடிப்பது என்று தீர்மானித்தேன் . நாற்பத்தைந்தே நாட்களில் ‘ சர்மாவின் உயில் ‘ நாவலை எழுதி முடித்துவிட்டு , அடுத்த பத்து நாட்களில் அதைத் திரும்பவும் எழுதிவிட்டேன் . இரண்டாவது தடவை எழுதியது பல அனாவசிய பகுதிகளை அகற்றவும் நாவலைச் மான சுருக்கமாக எழுதவும் எனக்குப் பயன்பட்டது .
இந்நாவலில் வரும் கதையோ சம்பவங்களோ ஜோசியமோ முக்கியமல்ல . ஆனால் குணச் சித்திரங்கள் , மனப்போராட்டம் , உலகமே ஒரு குடும்பம் என்கிற சித்தாந்தம் இவற்றில் நம்பிக்கை வைத்து நான் எழுதிய நாவல் ‘ சர்மாவின் உயில் ‘ . எனக்குத் திருப்தி தந்த முதல் நாவல் இது .