SAVE 7%
In Stock

சமுத்திரன் எழுத்துகள் தொகுதி – 02

280 260

இந்த நூலில் சர்வதேச அரசியல் பொருளாதாரம் தொடர்பான பதினொரு கட்டுரைகள் சேர்க்கப்பட்டுள்ளன. 1994 இல் பிரசுரிக்கப்பட்ட ஒரு கட்டுரையைத் தவிர மற்றவை எல்லாம் 2009 – 2020 காலத்தில் வெளிவந்தவை. நவதாராளவாதம் மற்றும் உலகமயமாக்கலின் பல்வேறு அம்சங்கள், முதலாளித்துவத்தின் எதிர்காலம், சுற்றுச் சூழல் நெருக்கடிகள் பற்றிய மாக்சிச செல்நெறிகள், கோவிட் பெருந்தொற்றின் அரசியல் பொருளாதாரப் பரிமாணங்கள், 1917 ஒக்டோபர் புரட்சி, மற்றும் மாக்சிசத்தின் இன்றைய பயன்பாடு ஆகியன இந்தக் கட்டுரைத் தொகுப்பில் அலசப்படும் பிரதான விடயங்களாகும். இந்த நூலின் பல கட்டுரைகளின் பேசுபொருட்களில் நவதாராளவாதம் ஒரு முக்கிய இடத்தைப் பெறுகிறது. இந்த நூலை ஒரு கட்டுரைத் தொகுப்பாகப் பார்க்குமிடத்து அதன் பேசுபொருட்கள் பெரும்பாலும் கடந்த நான்கு தசாப்தங்களின் உலக அரசியல் போக்குகள் மற்றும் விவாதங்கள் தொடர்பானவை என்பது புலப்படும்.

1 in stock

Category: