SAVE 7%
In Stock

கேள்வி எண் 17182 / Kelvi Enn 17182

190 177

வழக்கமாக எல்லாக் கைதிகளுக்கும் வழங்கப்படும் ஓர் எண்தான். ஆனால் சவுக்கு சங்கரிடம் வந்து சேர்ந்த பிறகு 17182 எனும் எண் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுவிடுவதற்குக் காரணம் ஒன்றுதான். கொடும் குற்றம் எதுவும் புரிந்ததால் அல்ல, கேள்வி கேட்டதால் அவருக்கு வழங்கப்பட்ட எண் அது.

உண்மை என்று தனக்குப் பட்டதை அதிகாரத்தின் முன்பு வெளிப்படையாகப் பேசியதால் கிடைத்த எண். பலமிக்கவர்கள் தவறிழைக்கும்போது நமக்கென்ன என்று எல்லோரையும்போல் ஒதுங்கி நிற்காமல், என்ன நடந்தாலும் பரவாயில்லை என்று துணிந்து நின்று இயங்கியதற்காக கிடைத்த எண். காவல்துறை, அரசியல், ஊடகம், நீதித்துறை வரை எதுவொன்றும் புனித அமைப்பு அல்ல; மக்களுக்காகப் பணியாற்றும் எவரும் கேள்விக்கு அப்பாற்பட்டவரல்லர் என்பதைத் தனது சொல்லாலும் செயலாலும் தொடர்ந்து உணர்த்தி வருவதற்காக கிடைத்த எண்.

எழுத்துதான் அவர் ஆயுதம். உண்மைதான் அவர் மதம். சமரசமற்ற தன்மைதான் அவர் வாழ்க்கை. இப்படியொரு அசாதாரணமான வாழ்க்கைமுறையைப் பின்பற்றிவருவதால்தான் தனித்துவமான ஊடகவியலாளராகவும் மக்களுக்கு நெருக்கமான செயற்பாட்டாளராகவும் சவுக்கு சங்கரால் நீடிக்க முடிகிறது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்காக கடலூர் சிறையில் அடைக்கப்பட்ட சவுக்கு சங்கர் தன்னுடைய சிறை அனுபவங்களைப் பதைபதைக்கச் செய்யும் நடையில் இந்நூலில் பகிர்ந்துகொண்டிருக்கிறார். அதிகார வர்க்கத்தை எதிர்த்து ஒரு சாமானியர் முன்னெடுத்த போரின் வரலாறாகவும் இது திகழ்கிறது.

1 in stock

Category:

Additional information

AUTHOR NAME

NO OF PAGES

152

PUBLISHED ON

2023