காவிரியின் ஒட்டுமொத்த வரலாற்றையும் தனது துல்லியமான ஆய்வின்மூலம் மீட்டுக்கொடுத்துள்ளார் இயக்குநர் அகத்தியன் . காவிரி துவங்கும் இடத்திலிருந்து , முடியும் இடம் வரையிலும் , இரு கரை நெடுகிலும் நடந்த வரலாற்று மாற்றங்கள் , வளர்ந்த நாகரிகம் , விவசாயம் , மக்கள் , ஊர்கள் , போர்கள் , படுகொலைகள் , இலக்கியப் பதிவுகள் , கல்வெட்டுப் பதிவுகள் என எதையும் மீதம் வைக்காமல் , எல்லாவற்றையும் தனது எழுத்துக்குள் கொண்டுவந்துள்ளார் . காப்பியங்களிலும் , புராணங்களிலும் விரிவாகப் பதிவாகி இருந்தாலும் , காவிரி வளர்த்ததும் , காவிரியால் வளர்ந்ததுமான மக்கள் சமூகத்தின் ஒரு வரலாற்றுப் பிரதியாக , காலத்தின் சாட்சியமாக இந்நூல் இடம்பெறும் என்பதில் ஐயமில்லை .