கல்வெட்டு சொல்லும் கோயில் கதைகள் /Kalvettu Sollum Kovil Kadhaigal
₹180₹167
தமிழ்நாட்டுத் திருக்கோயில்களை வழிபாட்டுத் தலங்கள் மட்டுமே என நினைக் கக்கூடாது . ஆகமம் , சிற்பம் , ஓவியம் , செப்புத் திருமேனிகள் , கட்டடக்கலை , மரவேலைப்பாடுகள் , நாட்டியம் , இசை என எண்ணற்ற கவின் கலைகள் சார்ந்த துறைகள் எத்தனையோ நூற்றாண்டுகளாக அங்கு வாழ்ந்துகொண்டே இருக் கின்றன . அறம் சார்ந்த சமுதாயம் உருப்பெற திருக்கோயில்களே காரணமாக இருந்தன . தருமநீதி தழைக்கின்ற இடமும் அதுதான் . பெருமன்னர்களும் , சிற்றரசர்களும் , அவர்கள்தம் அலுவலர்கள் , படைத்தலைவர்கள் , அரசியர் , ஊர்ச்சபையோர் , கொடையாளர்கள் , கடைநிலைச் சாமானியர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் நாட்டிற்கு விட்டுச் சென்ற வரலாற்று ஆவணங்கள் அனைத்தும் கல்வெட்டுகளாகவும் , செப்பேட்டுச் சாசனங்களாகவும் உறைகின்ற இடமும் திருக்கோயில்தான் . நம் முன்னோர்களின் சமூக அக்கறை எவ்வளவு ஆழமானது என்பதைத் கல்லெழுத்துக்கள் வாயிலாக அறியலாம் . குறிப்பாக நீராதாரங்களைத் திருக்கோயில்கள் எவ்வாறு காத்துநின்றன என்பதை உணர லாம் . இப்படிக் கல்வெட்டுகள் வழியாகக் கோயில்கள் சொல்லும் கதைகள் , முன்னோர்களை நினைத்து நம்மைப் பெருமிதம் கொள்ளச் செய்யும் .