Additional information
Weight | 0.578 kg |
---|---|
AUTHOR NAME | |
BOOK FORMAT | Hard cover |
color | Pink |
ISBN | 9789387333376 |
NO OF PAGES | 416 |
PUBLISHED ON | 2018 |
PUBLISHER NAME | |
TRANSLATOR | ஸ்ரீதர் ரங்கராஜ் / Sridhar Rangaraj |
₹500 ₹465
பெர்ஃப்யூம் நாவலுக்குப்பிறகு அதிகம் பேசப்பட்ட ஐரோப்பிய இலக்கிய வெளிப்பாடு . அடுத்தடுத்து பலநாடுகளில் விமர்சனரீதியில் ஆரவாரமான வெற்றியும் மிகச்சிறந்த விற்பனையையும் ஒருங்கே பெற்றது . கசார்களின் அகராதி வியப்புக்குரிய திறத்தோடு புனைவின் வழக்கமான எல்லைகளைத் தகர்த்து எறிந்தவொரு எழுத்தாளரின் சர்வதேச அறிமுகம் எப்படியிருக்குமென அடையாளமிடுகிறது . இது முழுமையான ஓர் உலகம் குறித்த மற்றும் தொலைந்துவிட்ட சிறந்த மனிதர்களைப் பற்றிய புதினம் . இதுவோர் அறிவின் புத்தகம் . நிகழ்காலத்தைப் பற்றியது மற்றும் சிலநேரங்களில் எதிர்காலத்தைப் பற்றியதும் , அதனால்தான் ஆயிரத்தி நூறு வருடங்களுக்கு முன்பிருந்து தொடங்குகிறது . இது மிகச்சிறந்த ( மற்றும் கட்டுக்கடங்காத ) மூன்று அறிவாளிகளைப் பற்றியது – ஒரு கிறிஸ்தவர் , ஒரு யூதர் , ஒரு மொஸ்லம் – உலகம் எவ்வழியிலிருக்க வேண்டுமெனும் இவர்களின் விவாதம் முடிவுறவேயில்லை . மலைக்கச்செய்யும் தத்துவத்தினால் மூடப்பட்ட மர்மம் இது . மர்மத்தில் பொதியப்பட்ட அரேபிய இரவுகளின் காதற்புனைவு . காதற்புனைவில் பொதியப்பட்ட பல்வேறு கொலைக் கதைகள் . ரகசியங்களில் சுருட்டப்பட்டுள்ள ஒளியூட்டம் குறும்பாகச் சீண்டும் அறிவார்ந்ததொரு விளையாட்டு மற்றும் ஒரு வியப்பூட்டும் சாகசம் . இதன் ஆகச்சிறந்த பாத்திரங்கள் காணாமல் போகிறார்கள் , பிறகு அறியமுடியாதவொரு மாறுவேடம் புனைந்து மறுபடி தோன்றுகிறார்கள் . பல சாத்தான்கள் வருகின்றன . ரத்தக்காட்டேரிகளும் வருகின்றன . எதிராளியை உறக்கத்தில் தொடரும் ஒரு குழுவின் பூசாரிகள் , ஏனெனில் அவர்கள் கனவை வேட்டையாடுபவர்கள் . இது இரண்டு பிரதிகளாக வருகிறது , ஒன்று ஆண் மற்றொன்று பெண் , இரண்டும் பதினேழு ( முக்கியமான ) வரிகளில் மட்டுமே வேறுபடுகின்றன . வாசகர்கள் தங்களுக்கு விருப்பமான ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம் . ஒரு கடவுச்சீட்டைப்போல கசார்களின் உலகத்தில் அவர்களது பயணம் அவர்களுடைய தேர்வைப் பொறுத்து மாறுபடும் . இரண்டு வகையிலும் , காதல் , மரணம் மற்றும் கிட்டத்தட்ட பிரபஞ்சத்தின் அத்தனை சாகசத்திற்கான சாத்தியக்கூறுகளும் கொண்ட புதினத்திற்குள் தங்களை இழக்க விரும்புபவர்கள் பாவிச்சைக் கையிலெடுத்து மூழ்கலாம் . அவர்கள் மெய்மறந்து பரவசத்திற்குள்ளாவார்கள் .
1 in stock
Weight | 0.578 kg |
---|---|
AUTHOR NAME | |
BOOK FORMAT | Hard cover |
color | Pink |
ISBN | 9789387333376 |
NO OF PAGES | 416 |
PUBLISHED ON | 2018 |
PUBLISHER NAME | |
TRANSLATOR | ஸ்ரீதர் ரங்கராஜ் / Sridhar Rangaraj |