SAVE 7%
Out of Stock

கசார்களின் அகராதி ஆண் பிரதி / Dictionary Of The Khazars Male Edition

500 465

சர்வதேச அளவில் மிகச்சிறந்த விற்பனையைக் கொண்ட புத்தகம் , கசார்களின் அகராதி நியூயார்க் டைம்ஸ்சில் 1988 ஆம் வருடத்தின் சிறந்த புத்தகங்களுள் ஒன்றெனக் குறிப்பிடப்பட்டது . ஆண் மற்றும் பெண் என இரண்டு பிரதிகளை உடையது . அவை ஒன்றையொன்று ஒத்தவை என்றாலும் பத்தொன்பது முக்கியமான வரிகளில் வேறுபட்டவை அகராதி என்பது கசார்களின் கற்பனையான அறிவுப் புத்தகம் . இவர்கள் ஏழு மற்றும் ஒன்பதாம் நூற்றாண்டுகளுக்கிடையே ட்ரான்சில்வேனியாவைத் தாண்டியதொரு நிலப்பரப்பில் தழைத்திருந்த இனம் . மரபார்ந்த கூறுமுறை மற்றும் கதையமைப்பைத் தவிர்த்துவிட்ட அகராதி வடிவிலான இப்புதினம் உலகின் முப்பெரும் மதங்களது அகராதிகள் ஒன்றிணைந்து உருவானது . இதன் பதிவுகள் கடந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்குமிடையே தவ்விச் செல்பவை . கட்டுப்பாடற்ற மூன்று மதிநுட்பமுடையவர்கள் , நச்சு மையினால் அச்சிடப்பட்ட புத்தகம் , முகம் பார்க்கும் கண்ணாடிகளால் நிகழும் தற்கொலை , பெரும்புனைவாய் ஓர் இளவரசி . ஒருவரின் கனவுக்குள் உட்புகுந்து செல்லக்கூடிய குறிப்பிட்டதொரு இனத்தின் பூசாரிகள் , இறந்துவிட்டவர்களுக்கும் இருப்பவர்களுக்குமிடையே உருவாகும் காதல் என இன்னும் பலவற்றை உள்ளடக்கியது இப்புதினம் .
The New York Times
இதன் கட்டமைப்பின் புதுமை மற்றும் உருவகங்களில் அமைந்துள்ள நகைச்சுவையான படைப்புத்திறம் உள்ளிட்ட அனைத்துமே உணர்ச்சிமிக்க , வெகுகொண்டாட்டமான வாசிப்பு அனுபவம் . “
நியூயார்க் டைம்ஸ் புத்தக விமர்சனம்
The Washington Post
” போர்ஹேஸ் அல்லது கார்சியா மார்க்வெஸ் போல . பாவிச்சிற்கு ) தன்னுடைய செப்பிடுவித்தை கொண்ட எழுத்திற்கு எவ்வாறு அதியற்புதமான . வெகுநுணுக்கமான சித்திரங்கள் மற்றும் மனம் மயக்கும் நிகழ்வுகளால் வலுச்சேர்க்க வேண்டுமென்று தெரிந்திருக்கிறது . “
வாஷிங்டன் போஸ்ட் புக் வேர்ல்ட்

Out of stock

Additional information

Weight 0.559 kg
AUTHOR NAME

BOOK FORMAT

Paper Back

ISBN

9789387333369

NO OF PAGES

416

PUBLISHED ON

2018

PUBLISHER NAME

TRANSLATOR

ஸ்ரீதர் ரங்கராஜ் / Sridhar Rangaraj