உயிர்ச்சொல் ‘ நாவல் ஓர் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவானது . ஒரு குழந்தைக்காக ஏங்கித் தவித்து , வரமாகப் பெற்றபின் மன அழுத்தத்துக்கு உள்ளாகி , அதிலிருந்து மீண்டுவந்த ஒரு தாயின் உண்மைக் கதை இது . பகிர்ந்து கொள்ளப்படாத ஒரு பருவத்தைப் பகுத்தறியும் முயற்சி இது . உண்மைக் கதையின் பின்னணியில் அதே கட்டமைப்போடு ஓர் அரசியல் கற்பனையும் வரையப்பட்டிருக்கிறது . கபிலன் வைரமுத்து என்ற இளம் தமிழ் எழுத்தாளரின் புதிய பரிணாமம் இந்தப் படைப்பு . ‘ இலக்கிய வாசலுக்கு ஒரு வாழ்க்கை வந்து விழும்போது எழுத்தாளனுக்குப் புதிய உத்வேகம் கிடைக்கிறது ‘ என்பது கபிலனின் கருத்து .
கவிதை , சிறுகதை , நாவல் என்று பல இலக்கிய வடிவங்களைக் கையாண்டவர் என்பதாலும் , நவீன சமூகத்தின் பல்வேறு அடையாளங்களைப் பதிவு செய்யும் தாகம் கொண்டவர் என்பதாலும் கபிலன் வைரமுத்துவை பன்முக எழுத்தாளர் என்று அழுத்திச் சொல்லலாம் .
‘ உயிர்ச்சொல் கபிலன் வைரமுத்துவின் இரண்டாவது நாவல் .