ஆரம்பத்தில் குழந்தை அழ , சிரிக்க விரும்பும் . இந்த அழுகை அவனுக்கு ஆழமான தேவையாகும் . அழுகையின் வாயிலாக ஒவ்வொரு நாளும் அவன் உணர்வுகளை வெளியேவீசுகிறான் . குழந்தைக்குப் பலவிதமான ஏமாற்றங்கள் ஏற்படுகின்றன . அது அப்படித்தான் இருந்தாக வேண்டும் . அது தேவையுமாகும் . குழந்தைக்கு ஏதோ தேவைப்படுகிறது . ஆனால் , தனக்கு என்ன தேவை என்பதை அதனால் கூற இயலாது . அதை வெளிப்படுத்த அவனால் முடியாது . குழந்தை ஏதோ கேட்கிறது . ஆனால் , அதைக் கொடுக்க முடியாத நிலையில் அதன் பெற்றோர்கள் இருக்கிறார்கள் . தாய் அங்கு இல்லாமல் இருக்கலாம் . அவள் வேறு ஏதோ வேலையில் இருந்திருக்கலாம் . அவளால் குழந்தையைக் கவனிக்க முடியாமல் இருந்திருக்கலாம் . அந்தக் கணத்தில் அவனுக்கு கவனம் எதுவும் கிடைக்கவில்லை . எனவே , அவன் அழத் துவங்குகிறான் .
தாய் அவனுக்கு பொம்மையைக் கொடுக்கிறாள் . பால் கொடுக்கிறாள் . அவனைச் சமாளிக்க , சமாதானப்படுத்த எதையாவது செய்கிறார்கள் . ஏனெனில் , அவன் அழக்கூடாது .
ஆனால் , அழுகை மிகவும் அவசியமான ஒன்றாகும் . அவன் அழுதால் அவனை அழ விட்டுவிட வேண்டும் . அழுதபின் அவன் புத்துணர்வுடன் இருப்பான் . அந்த ஏமாற்றம் அழுகையின் மூலம் வெளியே வீசப்பட்டுவிட்டது . அழுகையை நிறுத்திவிட்டால் ஏமாற்றமும் உள்ளேயே நின்றுவிடும் . அவன் அதன்மீது மற்றவைகளை இட்டு நிரப்புவான் . அழுகையும் உள்ளே அதிகரித்துக்கொண்டே போகும் .