இன்றைய இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் , மதச்சக்தியாகத் திகழும் இந்துத்வத்தின் வரலாறு .
இந்துத்வ இயக்கத்தின் அரசியல் வரலாறு ஆரிய சமாஜத்தை ஆரம்பித்த தயானந்த சரஸ்வதியிடம் இருந்து தொடங்குகிறது . திலகர் , சாவர்க்கர் , ஹெட்கேவார் . கோல்வால்கர் , சியாமா பிரசாத் முகர்ஜி , தீனதயாள் உபாத்யாயா , வாஜ்பாய் , அத்வானி என்று தொடரும் அந்தப் பாரம்பரியம் இன்று நரேந்திர மோடியின் அசாதாரண எழுச்சியின் மூலம் ஒரு புதிய பரிமாணத்தை எட்டியிருக்கிறது .
இந்துத்வத்தின் இத்தகைய வளர்ச்சிப்போக்கை மிக விரிவான களப் பின்னணியோடு பொருத்தி ஆராய்வது இன்றைய அவசர , அவசியத் தேவை . அதனை உணர்ந்து , சிப்பாய் புரட்சி , இந்து மகா சபாவின் ஆரம்பம் , ஆர்.எஸ்.எஸ்ஸின் தோற்றுவாய் , இந்தியப் பிரிவினை , ஜனசங்கத்தின் உருவாக்கம் , எமர்ஜென்ஸியில் இந்துத்வ இயக்கங்கள் எதிர்கொண்ட சவால்கள் , ஜனதா ஆட்சியைப் பிடித்த விதம் , பாஜக உருவான கதை . ஆட்சியதிகாரத்தில் இந்துத்வம் என்று இந்துத்வ அரசியலின் அதிமுக்கிய அசைவுகளைத் துல்லியமான தரவுகளுடன் பதிவுசெய்கிறது இந்தப் புத்தகம் .
காந்தி படுகொலை , காமராஜர் கொலைமுயற்சி , மீனாட்சிபுரம் மதமாற்றம் , மண்டைக்காடு கலவரம் , ரத யாத்திரை , பாபர் மசூதி இடிப்பு , பொடா சட்டம் , கோத்ரா ரயில் எரிப்பு , குஜராத் கலவரம் என்று இந்துத்துவ அரசியலின் சர்ச்சைக்குரிய நிகழ்வுகளுக்குப் பின்னால் இருக்கும் மெய்யான அரசியலை விவரிக்கும் இந்தப் புத்தகம் . இந்துத்வ அரசியலின் எழுச்சி , வீழ்ச்சி , மீட்சியைத் தகுந்த வரலாற்றுப் பின்புலத்தோடு அழுத்தமாகப் பதிவு செய்கிறது .
இந்திய , தமிழக அரசியல் களத்தைத் தொடர்ச்சியாக ஆய்வு செய்துவரும் ஆர் . முத்துக்குமாரின் இந்தப் புத்தகம் சமகால இந்தியாவின் இன்னொரு பரிமாணத்தின் மீது புதிய வெளிச்சம் பாய்ச்சுகிறது .
தமிழக அரசியல் வாரமிருமுறை இதழில் வெளியான அயோத்தி … ஆர்.எஸ்.எஸ் .. இந்துத்வா தொடரின் நூல் வடிவம் .