SAVE 7%
In Stock

வேலூர்ப் புரட்சி 1806 / Vellore Puratchi 1806

325 302

1806 ஜூலை 10. அதிகாலை இரண்டு மணி . வேலூர்க் கோட்டை . ஏறத்தாழ 500 இந்தியப் படை வீரர்கள் அதன் ஐரோப்பியர் குடியிருப்புக்குள் நுழைந்து ஏராளமான வெள்ளை இன அதிகாரிகளையும் போர்வீரர்களையும் சுட்டுக் கொன்றனர் . கர்னல் ராபர்ட் கில்லெஸ்பி என்ற தளபதியின் தலைமையில் ஆங்கிலேயர் படை வெளியூரிலிருந்து வரும்வரை அவர்களது கிளர்ச்சி எந்த எதிர்ப்புமில்லாமல் நீடித்தது . பின்னர் நடந்த கடும் மோதலில் எண்ணற்ற இந்தியப் படைவீரர்கள் கொல்லப்பட்டனர் . தப்பியோடிய நூற்றுக்கணக்கானோரை ஆங்கிலப் படையினர் விரட்டிக் கொன்றனர் . கைது செய்யப்பட்டவர்களை இராணுவ நீதிமன்றம் விசாரித்துத் தண்டித்தது . 1806 இல் நடந்த இந்நிகழ்வை வேலூர்ப் படுகொலை , வேலூர்க் கலகம் , வேலூர் எழுச்சி , வேலூர்க் கிளர்ச்சி , வேலூர்ப் புரட்சி எனப் பலவாறு வரலாற்றறிஞர்கள் வர்ணித்துள்ளனர் . வேலூர்க் கிளர்ச்சிக்கான காரணங்கள் , நடந்த நிகழ்வுகள் , நிகழ்வுகளுக்குப்பின் கம்பெனி அரசு எடுத்த நடவடிக்கைகள் , அவற்றின் விளைவுகள் , முதலானவற்றை இந்நூல் ஆய்வு செய்கிறது . வேலூர் நிகழ்வுகள் எவ்வாறு தென்னிந்தியாவின் பிற பகுதிகளிலும் எதிரொலித்தது என்பதையும் விவரிக்கிறது . ‘ வேலூர்ப் புரட்சி ‘ முதல் இந்தியச் சுதந்திரப் போராகக் கருதப்படும் 1857 ஆம் ஆண்டின் இந்நூல் நிறுவுகிறது . பெரும் கிளர்ச்சிக்குக் கட்டியங்கூறுவதையும் பிரிட்டிஷ் நூலகம் ( லண்டன் ) , ஸ்காட்லாந்து தேசிய ஆவணக்காப்பகம் ( எடின்பரோ ) , தமிழ்நாடு ஆவணக்காப்பகம் , இந்திய தேசிய ஆவணக்காப்பகம் முதலானவற்றிலிருந்து திரட்டிய ஆவணங்களிலிருந்து இந்தியக் கண்ணோட்டத்தில் இந்நூலை எழுதியுள்ளார் கா.அ. மணிக்குமார் .

1 in stock

Additional information

Weight 0.310 kg
AUTHOR NAME

BOOK FORMAT

Paper Back

ISBN

9789355230232

LANGUAGE

NO OF PAGES

272

PUBLISHED ON

2021

PUBLISHER NAME