மூடியிருக்கும் கை , வெறும் கை – இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது . மந்திரம் என்பது மூடியிருக்கும் கை . உள்ளே மறைந்து கிடப்பதைக் கண்டறியும் முயற்சி நமக்கு இருக்க வேண்டும் .
திருமந்திரம் , கல்லாதவர்களுக்கு அறிவையும் , கற்றவர்களுக்குத் தெளிவையும் வழங்கக்கூடியது . இது , சம்சார சாகரத்தின் ஆழத்தையும் , யோக நெறியின் அகலத்தையும் கண்டது .
வேதங்களும் , ஆகமங்களும் எடுத்துரைத்த விஷயங்களையெல்லாம் ‘ மந்திரங்களா’க்கித் தந்துள்ளார் திருமூலர் . திருமந்திரம் ஒரு கருத்துக் கருவூலம் . திருமந்திரத்துக்கு எத்தனையோ பேர் உரைகளும் , விளக்கங்களும் எழுதியிருக்கிறார்கள் .
இந்தப் புத்தகத்தில் , சராசரி மனிதர்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்குத் தேவைப்படும் விஷயங்களை முடிந்த அளவில் தேர்ந்தெடுத்து , தொகுத்துக் கொடுத்திருக்கிறோம் .
வாழ்க்கை சிறக்கவும் , மேம்படவும் நீங்கள் மேற்கொள்ளும் உங்களுடைய தேடலில் இந்தப் புத்தகம் சிறந்த வழித்துணையாக இருக்கும் .