SAVE 7%
In Stock

சமுத்திரன் எழுத்துகள் தொகுதி – 01

300 279

மக்கள், சமூகங்கள், ஒடுக்கப்படுபவர்கள். ஏழைகள், அகதிகள் என விரியும் இந்த பெரும் பரப்பில், இந்தப் பிரிவினர்களின் நலனை முன்னிருத்திய இத்தகைய பார்வைகள் மிக வலுவானவை மட்டுமல்ல, மனித குலத்தின் தார்மீகமான அடிப்படை அத்திவாரமுமாகும். இதனை இக்கட்டுரைகளின் ஒவ்வொரு பக்கத்திலும் நாம் காணலாம்! கிட்டத்தட்ட ஐந்து தசாப்தங்களாக இலங்கை, இந்திய, புகலிட நாடுகளின் சமூகத்தளங்கள், இவற்றில் நிகழ்ந்த பல்வேறு அம்சங்கள் இத்தொகுதியின் பேசுபொருளாகும். வடிவம் சார்ந்து நாடகம், கூத்து, நாவல், கவிதை, நூலாய்வு எனவும், துறை சார்ந்து வரலாறு, கோட்பாடு. தேசியவாதம், இந்துத்துவா, தலித்தியம், புகலிட சமூகம், யாழ்ப்பாண சமூகம், மலையகத் தமிழ் சமூகம் எனும் பகுதிகளையும் இத்தொகுதி உள்ளடக்கமாகக் கொண்டுள்ளது. புகலிட தமிழ் சமூக உருவாக்கம், புகலிட கலை இலக்கியம் என்பன, இன்று தன்னை நிலைப்படுத்தி அடுத்த கட்டத்திற்குள் நகர்ந்து வருகிறது. புகலிடத்தில் பிறந்து. வளர்ந்து, கல்விகற்ற பிரிவினர் உருவாகி விட்டனர். இந்த சமூக உருவாக்கத்தின் தொடக்கப் போக்குகள் பற்றிய தேடலிலும், ஆய்விலும் ஆர்வம் கொண்டோருக்கும் இத் தொகுதியின் உள்ளடக்கம் துலக்கமான புள்ளிகளைக் காட்டக்கூடியது.

1 in stock

Category: