SAVE 7%
Out of Stock

கிராம கீதா / Graama Geetha

335 312

சந்த் துகடோஜி மகராஜ் 1909 – 1968 : மகாராஷ்டிரா மாநிலத்தில் விதர்பா ( அன்றைய மத்தியப்பிரதேசம் ) பகுதியில் யாவளி என்ற ஊரில் பிறந்தார் மாணிக்தேவ் . முறையான கல்வி பயிலாத மாணிக் சாதுக்களோடு சுற்றி அலைந்து மக்களிடம் கல்வி , விவசாயம் , சுகாதாரம் , பக்தி போன்ற விஷயங்களைப் பற்றி சொற்பொழிவு ஆற்றி துகடோஜி மகராஜ் என்று புகழ்பெற்றார் . பல நூல்களைக் காவியமாக இயற்றினார் . அவர் இயற்றிய நூல்கள் பெரிய பண்டிதர்களால் , தேசத்தலைவர்களால் பாராட்டபெற்றவை . இவை குடத்துக்குள் கடல் போல் அறிவுக்களஞ்சியங்கள் என அறியப்படுகின்றன .
கிராம கீதா : கிராமங்களின் அவல நிலை , கல்வியின்மை , ஏழ்மை மற்றும் பின் தங்கிய சமுதாயம் – இவை அனைத்தும் கண்ட துகடோஜி , நிலைமையை மாற்ற வழியை இக்காவியத்தின் மூலம் கூறுகிறார் . விவசாயத்தில் துவங்கி , கல்வி , கூட்டுறவுச் சங்கம் , கிராமப் பஞ்சாயத்து , பள்ளிக்கூடங்கள் , மகளிர் முன்னேற்றம் , சுத்தம் , சுகாதாரம் என்று மனித வாழ்க்கை முன்னேறத் தேவையானவற்றை இதில் காணலாம் .
விஜயலக்ஷ்மி சுந்தரராஜன் : தமிழ் , ஹிந்தி மற்றும் மராத்தி மொழிகளில் சிறுகதை மற்றும் நாவல்கள் படைத்து , பரிசுகளும் பெற்றுள்ள விஜயலக்ஷ்மி சுந்தரராஜன் , அகில இந்திய வானொலியில் இயக்குனராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் . ” ஆலமரம் ” என்கிற புதினம் இவரின் சிறந்த படைப்பு , பல பரிசுகள் பெற்றுள்ளது .

Out of stock

Additional information

Weight 0.464 kg
AUTHOR NAME

BOOK FORMAT

Paper Back

ISBN

9789389778694

NO OF PAGES

440

PUBLISHED ON

2020

PUBLISHER NAME

TRANSLATOR

விஜயலட்சுமி சுந்தரராஜன் / Vijayalakshmi Sundararajan