SAVE 7%
Out of Stock

கரமசோவ் சகோதரர்கள் 1,2 / Karamazov Sagotharargal 1,2

1,500 1,395

நம்மால் ஒருபோதும் தஸ்தயேவ்ஸ்கியின் நிலையை அடைய முடியாது . அது நமக்குத் தெரியும் . ஆயினும் , மீண்டும் மீண்டும் வாசிக்கிறேன் …. ‘ பிரதர்ஸ் கரமசோவை ‘ மீண்டும் மீண்டும் வாசிக்கிறேன் … எவ்வளவோ மகத்தான நூல் என்று மனதில்படுகிறது . இதுவரை காணாத புதிய தளத்தைக் கண்டு பிடிக்கிறேன் . ” – எம்.டி.வாசுதேவன் நாயர்
” … தன்னை அறிந்துகொள்ள விழையும் மனிதன் , தன் காலத்தை அறிந்து கொள்ள விழையும் மனிதன் , வாழ்க்கையின் எண்ணற்ற முகங்களைப் புரிந்து கொள்ள விழையும் மனிதன் இருக்கும் காலம்வரை , அவனுக்குத் தஸ்தயேவ்ஸ்கியைத் தேடிச் செல்ல வேண்டிய அவசியம் இருந்துகொண்டு தானிருக்கும் . “
– சுந்தர ராமசாமி “
தஸ்தயேவ்ஸ்கியை முதன்முதலாகப் படிக்க அமர்ந்த அந்த இரவு , என் வாழ்வில் மிக முக்கியமானதொரு நிகழ்வு . ஒரு மனிதனின் ஆத்மாவிற்குள் முதன்முதலாக என் பார்வை விழுந்தது அப்போதுதான் . அல்லது , தன் ஆத்மாவை என்னிடம் வெளிப்படுத்திய முதல் மனிதன் தஸ்தயேவ்ஸ்கிதான் …. அவனிடம் ஆழமாக மூழ்கிய இந்தத் தருணத்திலிருந்து நான் நிச்சயம் ஒரு வித்தியாசமானவனாக ஆனேன் ! அசைக்க முடியாதபடியும் , மனநிறைவோடும் இந்நிகழ்வு அமைந்தது . விழிப்பதும் , அன்றாட காரியங்களுமான தினசரி உலகம் என்னைப் பொறுத்த வரை மடிந்துவிட்டது … நான் நெருப்பினுள் வாழ்பவன் ஆனேன் . என்னைப் பொறுத்தவரை , மனிதனின் சாதாரண துயரங்கள் . போட்டி பொறாமைகள் , ஆசாபாசங்கள் அனைத்தும் உதவாக்கரை விஷயங்கள் , குப்பை கூளங்கள் என்றாகின ! ” – ஹென்றி மில்லர்

Out of stock

Category:

Additional information

AUTHOR NAME

BOOK FORMAT

Hard cover

ISBN

9788123420455

NO OF PAGES

634

PUBLISHED ON

2011

PUBLISHER NAME

TRANSLATOR

கவிஞர் புவியரசு / Kavingar Puviyarasu

WEIGHT

1.740