SAVE 7%
In Stock

கண்ணன் அருளிய பகவத் கீதை / Kannan Arulia Bhagawat Geethai

100 93

முதலில் கண்ணன் மனிதனா , தெய்வ புருஷனா என்ற சந்தேகத்தை இந்நூல் தெளிய வைக்கிறது . மனிதனாகப் பிறவி எடுத்து , மனித இயல்புகளுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்துவிட்ட ஒரு தெய்வ புருஷனே கண்ணன் என்பதைக் கீதை உணர்த்துகிறது .
மனிதனின் உணவு வகைகளில் இருந்து , வாழ்க்கை முறை வரை அனைத்தையும் ஒப்புக்கொண்டு பங்கீடு செய்துகாட்டி , இதை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று தெளிவுபடுத்தி , இகத்திலேயே ஜீவாத்மாவைப் பரமாத்வாக்க முயல்கிறான் கண்ணன் .
ரத்த பாசத்தில் இருந்து , யுத்த தர்மம் வரை போதிக்கிறான் . தொழில் செய்வதில் இருந்து தொழிலைத் துறப்பது வரை விளக்குகிறான் . நித்திய கர்மங்களிலிருந்து சத்திய தர்மம் வரை தெளிவுபடுத்துகிறான் .
அவன் வேதாந்தம் மட்டும் பேசவில்லை ; சித்தாந்தம் பேசுகிறான் ; மருத்துவம் கூறுகிறான் . மனோதத்துவம் சொல்கிறான் . எங்கெங்கோ பறக்கும் எல்லாப் பறவைகளுக்குமான சரணாலயம் , ‘ ஈஸ்வரனே ‘ என்பதை ‘ நானே ‘ என்று முடிக்கிறான் .
சில இடங்களில் ‘ நான் ‘ என்பதை விட்டுவிட்டு , ‘ ஈஸ்வரன் ‘ ‘ பரம்பொருள் ‘ என்ற வார்த்தைகளையே உபயோகப்படுத்துகிறான் .
ஆகவே கண்ணன் ‘ கடவுளா ? மனிதனா ? ‘ என்ற கேள்வி எழுந்தால் , இரண்டுக்கும் பாலம் என்பது இந்த நூலின் மூலம் உறுதியாகிறது .

1 in stock

Category:

Additional information

Weight 0.122 kg
AUTHOR NAME

BOOK FORMAT

Paper Back

ISBN

9788184026139

LANGUAGE

NO OF PAGES

160

PUBLISHED ON

2010

PUBLISHER NAME