SAVE 7%
In Stock

உயர… உயர… / Uyara… Uyara…

175 163

சம்பாதிப்பது மகிழ்ச்சி தரும். அதைவிடவும் மகிழ்ச்சி தருவது, சம்பாதித்ததிலிருந்து ஒரு துளியேனும் மற்றவர்களுக்கு அளிப்பது. வாழ்வது முக்கியம். அதைவிடவும் முக்கியம், முழுமையாகவும் நிறைவாகவும் வாழ்வது. உயரத்தைத் தொடுவது மட்டுமல்ல நம் இலக்கு. எவ்வளவு உயரம் சென்றாலும் பணிவோடு இருப்பதும்தான்.

நம்மிடம் இல்லாதவற்றைப் பட்டியலிட்டால் அது பெரியதாக இருக்கும். நம்மிடம் ஏற்கெனவே இருப்பவற்றின் பட்டியல் நிச்சயம் அதைவிடவும் பெரியது. இருந்தும், இல்லாததையே நாம் நாடிக்கொண்டிருக்கிறோம். அதற்காகவே ஏங்கிக்கொண்டிருக்கிறோம். நாம் விரும்பியடி உலகம் இயங்குவதில்லை. நமக்கு நெருக்கமானவர்களேகூட நூற்றுக்கு நூறு நம்மோடு ஒத்துப்போவதில்லை. இருந்தாலும் இந்த உலகில்தான் வாழ்ந்தாகவேண்டும். நம்மோடு முரண்படுபவர்களோடும் சேர்ந்துதான் இருந்தாகவேண்டும்.

வாழ்வில் ஏற்படும் முரண்களைக் களைந்து, ஒரு பறவையைப்போல் சிறகுகள் விரித்து உயரே, உயரே பறக்க விரும்புபவர்களுக்கான புத்தகம் இது. பொருளாதாரத்தில் மட்டுமல்ல; உறவுகளில், மன நிம்மதியில், மற்றவர்களுக்கு அளித்து மகிழ்வதில், ஆளுமைகளாக உருவாவதில் புதிய உயரங்களை அடைய இந்நூல் உதவும். கதைகள், அனுபவங்கள், சிந்தனைகள், செயல்திட்டங்கள் அனைத்தையும் சேர்த்து ஓர் அருமையான கையேட்டை உருவாக்கியிருக்கிறார் சோம. வள்ளியப்பன். வளமும் மகிழ்வும் பெற்று வாழ்வதற்கான சாவி இந்நூல்.

1 in stock

Category:

Additional information

AUTHOR NAME

NO OF PAGES

144

PUBLISHED ON

2023