ஆனையில்லா சிறுகதைத் தொகுப்பு / Aanai Illa Sirukathai Thogupu
₹350₹326
இந்தக்கதைகள் எல்லாமே என் இளமைநாட்களில் நிகழ்பவை . நிகழ்ந்தவையா என்றால் நிகழக்கூடியவை , நிகழ வாய்ப்பிருந்தவை , நிகழந்தவையும்கூட என்பேன் . பெரும்பாலான படைப்பாளிகள் அவர்களின் வாழ்க்கையில் ஒருகட்டத்தில் தங்கள் இளமைக்கு திரும்பிச் செல்கிறார்கள் . அங்கே எஞ்சும் நினைவுகளை கொண்டு ஓர் உலகைச் சமைக்கிறார்கள் . புத்தம்புதிய ஓர் உலகு . ஒளிமிக்க உலகு . முதுமையில் அவர்கள் அங்கேதான் வாழ்கிறார்கள் . என் இளமையைக்கொண்டு நான் சமைத்த இந்த உலகை இனியும் விரிவாக்குவேன் என நினைக்கிறேன் . ஒருவேளை எழுதாமல் போகலாம் . ஆனால் என்னுள் வளர்த்துக்கொள்வேன் . இப்போதே எழுதப்படாத பல கதைகள் என்னுள் இருக்கின்றன . இவற்றிலுள்ள கள்ளமற்ற கொண்டாட்டமே இவ்வுலகில் நான் வேண்டுவது . இங்கே மானுடர் வாழவேண்டிய வகை அது