Showing 1–16 of 466 results

 • Out Of Stock SAVE 7%
  Read more

  1084ன் அம்மா / 1084 Amma

  150 140
 • Out Of Stock SAVE 7%
  Read more

  24 ரூபாய் தீவு / 24 Roobaai Theevu

  180 167
 • Out Of Stock SAVE 7%
  Read more

  6961

  90 84
 • SAVE 7%
  Add to cart

  அசடன் / Asadan

  1,250 1,163
  சிறந்த மொழிபெயர்ப்புக்கான கனடா இலக்கியத்தோட்ட விருது , நல்லி திசை எட்டும் விருது , ஜி.யூ. போப் விருது வென்ற மகத்தான நாவல் “
  எனக்கு இருபத்தேழு வயதாகிறது .. ஆனாலும் கூட நான் ஒரு குழந்தையைப் போலத்தான் இருக்கிறேன் . என்னுடைய பாவனைகள் எல்லாமே எப்போதுமே இடத்துக்குப் பொருத்தமற்றவையாகவே இருக்கின்றன . எதை எப்படி எந்த அளவுக்குச் சொல்வது என்ற அறிவு என்னிடம் சுத்தமாகவே இல்லை . அதுதான் முக்கியமான விஷயம் .. ” என்று தன்னைக் குறித்த ஒப்புதல் வாக்குமூலத்தை மிஷ்கினே அளித்தபோதும் அவனை அசடனாக்கிப் பரிகசிக்கும் உலகம் அவன் ஒரு தூய ஆன்மா என்பதை மட்டும் மறுதலிப்பதே இல்லை . அவனுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டிருக்கும் கன்யா , ரோகோஸின் போன்றவர்களும் கூட அந்த உண்மையை ஆமோதிக்கவும் அங்கீகரிக்கவும் தயங்குவதில்லை என்பதில்தான் இந்த நாவலின் அழகு பொதிந்திருக்கிறது .
  எம்.ஏ. சுசீலா
 • SAVE 7%
  Add to cart

  அசுரகணம் / Asarakanam

  100 93
 • SAVE 7%
  Add to cart

  அஞ்சலை / Anjalai

  350 326

  இயல்புவாத எழுத்தில் தமிழின் முதன்மையான படைப்பாளி கண்மணி குணசேகரன் . விளிம்புநிலை மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளைப் பேசும் புதினங்களிலும் முன்னிலை வகிப்பது அஞ்சலை ‘ . இன்று வரையிலான நவீன தமிழ்ப் புனைகதைகள் சித்தரித்த பெண் கதாபாத்திரங்களிலும் அஞ்சலையே வலுவான வார்ப்பு .

 • Out Of Stock SAVE 7%
  Read more

  அடையாளங்கள் / Adayalangal

  290 270
 • Out Of Stock SAVE 7%
  Read more

  அண்டசராசரம் / Andasarasaram

  70 65
 • SAVE 7%
  Add to cart

  அந்த முகில் இந்த முகில் / Antha Mugil Intha Mugil

  250 233

  இந்தக்கதை நான்அறிந்த மெய்யான ஒரு வாழ்க்கையின் புனைவு வடிவம் . அந்த வாழ்க்கையின் உச்சநிலைகள் வழியாக மட்டுமே செல்லும் கதை . எழுச்சியும் சரிவும் உச்சநிலையிலேயே நிகழ்கின்றன . நுரைக்காத தருணமே இல்லாத கதை , பின்னணியாக அமைந்தது சினிமா என்னும் கனவு . அதிலும் கறுப்புவெள்ளை சினிமா என்பது தூய கனவு . கனவின் எழில்கொண்ட ஒரு கற்பனாவாதப் படைப்பு இது . ஒரு காதல்கதை . இழந்த காதலின்அல்லது இழக்க முடியாத காதலின் கதை .

 • SAVE 7%
  Add to cart

  அப்பல்லோ / Apollo

  245 228
 • Out Of Stock SAVE 5%
  Read more

  அப்போதே சொன்னேன் ! / Apothe Sonnen !

  20 19
 • SAVE 7%
  Add to cart

  அப்ஸரா / Apsara

  130 121
 • Out Of Stock SAVE 7%
  Read more

  அராபியச் சேரமான் / Arabiya Seramaan

  700 651
  முன்னுரை தென்னாட்டில் இருந்த அரச வம்சங்களைப் பற்றி வரலாற்று ஆசிரியர்கள் நிறையவே எழுதிவைத்திருக்கிறார்கள் சேரர் , சோழர் , பாண்டியர் , பல்லவர் , சிங்களர் , சாளுக்கியர் , ராஷ்டிர கூடர் , விஜயநகரத்தவர் , நாயக்கர்கள் , முகமதிய மன்னர்கள் என பல அரச வம்சங்களைப் பற்றி வரலாறுகளைப் படைத்த அப்பெருமக்கள் சேரர் வரலாற்றைப் பொறுத்தவரை பெரும் குறையை வைத்து விட்டனர் . அது இன்றளவும் தொடர்கிறது . சேரமன்னர்கள் வரலாறு என்று அறிஞர்கள் எழுதிவைத் திருப்பதெல்லாம் சங்ககாலச் சேரமன்னர்களைப் பற்றி மட்டும் தான் . களப்பிரர்கள் தென்னகத்தைத் தங்கள் ஆதிக்கத்தில் வைத்திருந்தார்கள் . கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு முடிவில் அது மீட்கப்பட்டது . சேர நாடும் மீட்கப்பட்டது . அந்தத் தகவல் மட்டுமே வரலாற்றில் உள்ளதே தவிர அக்காலகட்டம் முதல் சேர நாட்டை யார் யார் ஆண்டார்கள் என்ற தொடர்ச்சியான வரலாறு எழுதப்படவில்லை . ஒரு சில சேர மன்னர்களைப் பற்றிச் சோழர் வரலாற்றிலும் பாண்டியர் வரலாற்றிலும் காணப்படுகிறதே தவிர கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு முதல் தொடர்ச்சியான சேர மன்னர்களின் வம்சாவளியும் வரலாறும் கிடைக்கவில்லை . உரிய ஆதாரங்கள் சரிவரக் கிடைக்கப் பெறாததால் இக்காலகட்டத்தில் அரசு புரிந்த சேர மன்னர்களைப் பற்றி ஊகம் தான் செய்ய வேண்டியிருக்கிறது . சேரவரலாற்றின் இடைப்பட்ட காலத்தில் பெருமாள் ‘ என்ற பட்டத்துடன் இருபத்து ஐந்து மன்னர்கள் ஆண்டதாக டாக்டர் . கே.கே. பிள்ளை அவர்கள் தனது தென்னிந்திய வரலாற்றில் குறிப்பிடுகிறார் . அவர்களில் இருவரைப் பற்றிய விவரங்கள் இருக்கின்றன . ஒருவர் சேர நாட்டை ஆண்ட போதே அரியணையைத் துறந்த சிவநேசச் செல்வரான சேரமான் பெருமாள் நாயனார் .மற்றொருவர் சேர நாட்டை ஆண்ட போதே அரியணையைத் துறந்து திருமாலடியாரான சேரமான் பெருமாள் குலசேகர ஆழ்வார் . இவ்விருவரைப் பற்றி மாறுபட்ட கருத்துகள் தெரிவிக்கப் பட்டுள்ளன . சேரமான் பெருமாள் முதலில் ஆண்டு அவருக்குப் பின் குலசேகர் ஆண்டார் எனவும் , குலசேகரர் முதலில் ஆண்டு அவருக்குப் பின் சேரமான் பெருமாள் ( நாயனார் ) ஆண்டார் எனவும் கூறப்படுகின்றன . இது போதாதென்று இன்னொரு சேரமான் பெருமாள் சேர நாட்டை ஆண்டார் என்று சில செய்திகள் கூறுகின்றன . இவரைப் பற்றி இஸ்லாமிய எழுத்தாளர்கள் சில ஆதாரங்களைக் காட்டுகிறார்கள் . இப்படி இடைக்காலச் சேரர்களைப் பற்றி உறுதியாகவும் ஆதாரபூர்வமாகவும் தமிழ் நாட்டு சரித்திர நூல்கள் கூறாத நிலையில் இஸ்லாமியர்கள் சுட்டிக்காட்டும் ஆதாரங்களையும் எனது கற்பனையையும் சேர்த்தால் என்ன என்று எனக்குத் தோன்றியது . அதில் விளைந்தவன் தான் சேரமான் பெருமாளாகிய பாஸ்கர ரவிவர்மன் . இவன் அரபு நாட்டிற்குச் சென்று நபிகள் பெருமானைச் சந்தித்து இஸ்லாத்தைத் தழுவினான் என்று இஸ்லாமிய நூல்கள் சொல்லும் போது தமிழ் நாட்டு வரலாற்று நூல்களோ உறுதியாகச் சொல்லாமல் நழுவிச் செல்கின்றன . இந்த மன்னனைப் பற்றிய விவரங்கள் பிற்காலத்தில் கிடைக்கலாம் . சரித்திரமே கூட அவ்வப்போது கிடைக்கும் ஆதாரங்களைக் கொண்டு மாற்றி எழுதப்படுகின்றது . அதற்குப் பல உதாரணங்களைச் சொல்லலாம் . உறுதியான ஆதாரம் கிடைக்கும் வரை ஊகமும் கற்பனையும் தான் வரலாறாக இருக்கும் . நபி அவர்களைச் சந்தித்த சேரமான் பாஸ்கர ரவி வர்மன் தான் என்று கதையை அமைப்பதற்காக அவனது காலத்தை நபி அவர்களின் காலமாக மாற்றிக் கொண்டேன் . இதை வரலாற்று நாவலாகக் கருதாமல் கற்பனைக் கதை என்று கருதினாலும் எனக்கு உடன்பாடு தான் . ஆதாரங்கள் கிடைக்கும் போது இது கற்பனையா வரலாறா என்பது தெரிந்துவிடும் . இந்தச் சேரமானைப் பற்றி ஏற்கனவே இரண்டு நாவல்கள் வந்திருந்தாலும் அவை சேர நாட்டைப் பற்றி மட்டுமே சொல்லுவதால் எனக்குத் திருப்தியாக இல்லை . எனவே நான் முகமது நபிகள் பற்றியும் அரபு நாட்டில் உண்டான அவரது எழுச்சி பற்றியும் சொல்ல விரும்பினேன் . எனவே நாவலின் முதல் பாகம் அரபு நாடு பற்றியும் இரண்டாம் பாகம் சேர நாடு பற்றியும் கூறுகிறது . இது முகம்மது நபி அவர்களின் வரலாற்று நூல் அல்ல . அவரது வரலாற்றைத் தழுவி நாவலுக்கேற்ப அமைத்திருக்கிறேன் . அவரைப்பற்றி உயர்வான விஷயங்களையே சொல்லியிருக்கிறேன் . தவறு இருக்குமானால் இஸ்லாமிய நண்பர்கள் என்னை மன்னிக்க வேண்டும் . திருத்தங்களைச் சொன்னால் அடுத்த பதிப்பில் ஏற்கப்படும் . இந்த நூலை எழுதியதால் திருக்குர் ஆன் முதல் நபி அவர்களைப் பற்றிய பல நூல்களை வாங்கிப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது தான் எனது முதற்பயன் . இந்த நாவலில் இடம் பெறும் வேத சாஸ்திர விஷயங்கள் சம்பந்தமாக வேத சாஸ்திர விற்பன்னர்கள் பலர் எனக்கு உதவினார்கள் . அவர்களில் இராமாயணம் ஸ்ரீநிவாசன் அவர்கள் மிகவும் முக்கியமானவர் . அவருக்கு என் முதல் நன்றி . இந்த நாவலுக்கு உரிய குறிப்புகளை வலைத்தளம் மூலம் பெற்று உதவிய திருடிவி.ஜகன்னாதன் , டிவி.ரவி , டிவி கிருஷ்ணப் பிரசாத் , திரு . சுந்தர் அவர்களுக்கும் சைதாப்பேட்டை மகாத்மா காந்தி நூலகச் செயலாளர் பெரியவர் திரு . மகாலிங்கம் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி . இந்த நாவலுக்கு சேரநாடு சம்மந்தமாகப் பல்வேறு குறிப்புகளைத் தந்து உதவிய எனது சகோதரர் டிவி . கோபால் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி . இந்நூலுக்கு பிழைதிருத்தங்களைச் செய்து உதவிய வி.கே.எம் வித்யாலயாவின் முதல்வர் திருமதி . ராதா முரளி அவர்களுக்கு நன்றி . இந்த நாவலை ஈடுபாட்டுடன் தயாரித்து வெளியிட்ட சீதை பதிப்பகத்தாருக்கு என் அன்பு கலந்த நன்றி . வழக்கம் போலவே இந்நாவலில் நாவலுக்குரிய அனைத்து அம்சங்களையும் பாரபட்சமின்றிக் கொடுத்திருக்கிறேன் . மேலே கூறிய எல்லாவற்றையும் படித்து இன்புறக் கூடியவர்கள் வாசகப் பெருமக்கள் தான் . அவர்களுக்குக் கோடான கோடி நன்றி . மற்றபடி – யாவுமே பகவான் ரமணரின் அருளே அன்றி வேறில்லை . இறைவா ! என்னிடமிருந்து என்னைக் காப்பாற்று . மற்றவர்களை நான் பார்த்துக் கொள்கிறேன் .
  – உதயணன்
 • SAVE 7%
  Add to cart

  அர்த்தநாரி / Arttanaari

  225 209
 • SAVE 7%
  Add to cart

  அறுபடும் விலங்கு / Arubadum Vilangu

  350 326